உங்களின் முகங்களை; முகம் சொல்லும் உணர்வுகளை உலகமெங்கும் கொண்டு செல்ல வருகிறது அமெரிக்க வாழ் தமிழர் திருச்சி டெல் கணேசன் அறிமுகம் செய்யும் காணொலி சந்திப்பு தளம் ‘முகா’
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கைபா இன்னோவேஷன்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான காணொலி சந்திப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. கரோனா பெருந்தொற்று அச்சத்தால் வீடுகளால் அலுவலகமாகிவிட்ட சூழலில் திருச்சி டெல்.கணேசனின் கைபா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் ‘முகா’ (MUGA) என்ற காணொலி சந்திப்பு (வீடியோ கான்ஃபரன்சிங்) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முகா குறித்து திருச்சி டெல் கணேசன் அறிமுகப்படுத்தும்போது, “முகாவிற்கான எண்ணமும், கருத்தாக்கமும் அமெரிக்காவில் தான் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அதை முழுக்க முழுக்க வடிவமைத்தது இந்தியாவில் இருக்கும் கணினி தொழில்நுட்பக்குழுவே. முகா என்ற பெயர் முகம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றுள்ளோம். முகம் பார்த்து பேசும் காணொலி தளம் என்பதால் இப்பெயரை இறுதி செய்தோம்” என்றார்.
உலகைச் சுருக்கி ‘குளோபல் வில்லேஜ்’ என அழைக்கவைக்க மனிதனால் மனித குலத்திற்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் இணையதளம். இணையத்தின் தேவையை துணையை நாம் மேலும் சிறப்பாக உணர்ந்த தருணம் கரோனா ஊரடங்கு காலம். கரோனாவுக்குப் பின் நிறைய விஷயங்கள் நியூ நார்மல் என்ற சட்டத்துக்குள் வந்துள்ளது.
அதிலொன்று தான் இணையம் சாத்தியமாக்கிய காணொலி சந்திப்பு (வீடியோ கான்ஃபரன்சிங்) தளங்கள். பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்பு தொடங்கி மிகப்பெரிய பிசினஸ் மீட் மட்டுமல்லாது சர்வதேச உச்சி மாநாடுகள் வரை இன்று இத்தகைய ஆன்லைன் வீடியோ கான்ஃபரன்ஸிங் ஆப்கள் எளிதாக்கியுள்ளன. ஆதலால் தான் எத்தனை புது ஆப்கள் வந்தாலும் அத்தனைக்கும் சந்தையில் வரவேற்பும் உருவாகிறது. ஏற்கெனவே உள்ள ஆப்களுடன் புதிய அம்சங்களுடன் தன்னைத் தடம்பதிக்க அறிமுகமாகிறது முகா (MUGA) காணொலி சந்திப்பு தளம்.
திருச்சி, தமிழகத்தின் 2-ம் தலைநகராக மாற்ற வேண்டும் போட்டியில் முன்னணியில் நிற்கும் ஊர். திருச்சியின் பெருமைக்கு ஸ்ரீரங்கம் கோயில் இருக்கிறது. விஞ்ஞானி சர்.சி.வி ராமனை உலகுக்குத் தந்த ஊராக உயர்ந்து நிற்கிறது. நம் தேசத்தின் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் இங்குள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் பயின்றவர் என்பது கூடுதல் பெருமை. இலக்கிய ஆளுமை கி.ஆ.பெ.விசுவநாதன் வாழ்ந்த ஊர். ஹீபர் பள்ளியை பெருமிதத்துடன் தாங்கி நிற்கும் ஊர். பொன்மலை ரயில் பணிமனையையும், துப்பாக்கி தொழிற்சாலையையும் குறிப்பிடாமல் கடந்து செல்ல முடியுமா என்ன? காந்தியால் திறந்துவைக்கப்பட்டு காந்தியின் பெயரையே தாங்கி நிற்கும் காந்தி மார்க்கெட், திருச்சியின் தனி அடையாளம் அல்லவா? தமிழ்நாட்டிலேயே காந்திக்கான அஸ்தி மண்டபமும் திருச்சியில் தான் இருக்கிறது. சமண முனிவர்கள் வாழ்ந்த சிராப்பாளி மாண்பின் அடையாளமான திரு சேர்ந்து திருச்சிராப்பளியானது.
திருச்சியின் பல்துறை வல்லுநர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது இங்கே அவசியமாகிறது. இலக்கியத் துறையில், விவிஎஸ்.அய்யர், கார்ட்டூனிஸ்ட் மதன், பத்திரிகையாளர், எழுத்தாளர், விமர்சகர் என்ற பன்முகத்தன்மை கொண்ட மனுஷ்யபுத்திரன், சாமுவேல் வேதநாயகம் பிள்ளை, சமஸ்கிருத அறிஞர் குண்டலம் ரங்காசாரியர், எழுத்தாளர் சுஜாதா, கல்கி சதாசிவம் என பட்டியலை நீட்டிக்கொண்டு செல்லலாம்.
இசைக் கலைஞர்களைத் தருவதில் மட்டும் திருச்சி வஞ்சனை செய்யுமா என்ன? டி.கே.ராமமூர்த்தி, ஜி.ராமநாதன், திருச்சி லோகநாதன், லால்குடி ஜெயராமன், ஸ்ரீரங்கம் கண்ணன், டி.எல்.மகாராஜன், முசிறி சுப்ரமணிய ஐயர் என்ற ஜாம்பாவன்களையும் ஜேம்ஸ் வசந்தன், சந்தோஷ் நாராயணன் போன்ற சமகால கலைஞர்களையும் தந்துள்ளது.
நடிகர்களின் பட்டியலை எடுத்தால் எழுதி முடியாது என்றளவுக்கு உள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரில் பட்டியலைத் தொடங்குவோம். பழம்பெரும் நடிகர் எஸ்.ஏ.அசோகன், காகா ராதாகிருஷ்ணன், 90-களின் நாயகன் நெப்போலியன், கரண்ட் சென்ஷேசன் சிவகார்த்திகேயன், பிரசன்னா, நீயா நானா புகழ் கோபிநாத் சந்திரன், தமிழ்த் திரைப்பட காமெடி நடிகர் கருணாநகரன் என்று நிறை பேர் உள்ளனர். கனவுக்கன்னி என்றழைக்கப்பட்ட ஹேமாமாலினி பிறந்த ஊர் திருச்சி.
அரசியல் களத்திலும் திருச்சியைப் புறக்கணித்துவிட முடியாது. திராவிடக் கட்சிகள் தவறாமல் பெருங்கூட்டங்களை நடத்துமிடம் திருச்சி தான். எம்.ஜி.ஆர் அன்றுதொட்டே திருச்சியைத் தலைநகராக்க விருப்பம் காட்டியவர். இன்றளவிலும் மகா மாநாடு என்றால் அரசியல்கட்சியின் தெரிவு முதலில் திருச்சியாகத்தான் இருக்கிறது.
இத்தகைய பெருமைவாய்ந்த திருச்சியில் பிறந்தவர்தான் திருச்சி டெல்.கணேசன். திருச்சியின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் தான் நடத்தும் கைபா இன்னொவேஷன்ஸ் நிறுவனத்தின் படைப்பான நவீன, பிரவுசர் சார்ந்த காணொலி சந்திப்பு தளமான முகாவை அறிமுகம் செய்துள்ளார், அதன் நிர்வாக இயக்குநருமான, தலைவருமான திருச்சி.டெல் கணேசன்.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் டெல் கணேசன் நடிகர் நெப்போலியனையும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். மூன்று ஹாலிவுட் படங்களை எடுத்துள்ளார். நெப்போலியன் நடித்த டெவில்ஸ் நைட் (Devil’s Night) ஹாலிவுட் படம் ஏற்கெனவே திரைக்குவந்துவிட்டது. கிறுஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன.
அமெரிக்காவில் தனக்கென தனியிடத்தைத் தக்கவைத்துள்ள தமிழ் வம்சாவளி தொழிலதிபரான திருச்சி டெல். கணேசன், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக களமிறங்கும் கமலா ஹாரிஸை மரியாதை நிமித்தமாக அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, முகாவைப் பற்றி மேலும் அறிவோம்.
பணியிடம், வீடு என்ற சூழல் மாறி வீடே பணியிடமான காலகட்டத்தில் வேலை – குடும்பம் சமநிலைக்கு முகா போன்றொரு தளம் உதவியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று, மக்கள் மீண்டும் பணியிடங்களுக்குச் செல்வதில் மிகப்பெரிய மனப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சம், அவர்களை வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் வேலையை சிறப்பாகச் செய்ய புதிய தொழில்நுட்பத்தை நாடிச் செல்லச் செய்கிறது. அந்த வகையில், முகா காணொலி சந்திப்புகளை லகுவாக்கும். அது, இரு தனிநபர்களுக்கு இடையேயான உரையாடலாக இருக்கலாம். அல்லது குழு சந்திப்புகளாக இருக்கலாம். முகாவின் தொழில்நுட்ப அம்சங்கள் அத்தனையையும் சாத்தியமாக்கும். சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதே முகாவின் நோக்கம்.
டிஜிட்டல்மயமாகிவிட்ட வேலை, வர்த்தகத்தில் முகா மற்றுமொரு சிறந்த அப்ளிகேஷன். இப்போதைக்கு நாங்கள் சிறு மற்றும் குறு வர்த்தக நிறுவனங்களுக்காகவே முகாவை வடிவமைத்துள்ளோம். ஆதலால், தற்போது நடைமுறையில் இருக்கும் இது போன்ற எந்தவொரு தளத்தையும் நாங்கள் நேரடி போட்டியாளராகக் கருதவில்லை.
அப்படியென்றால், எங்கே நீங்கள் தனித்து நிற்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பலாம்? நீங்கள் உங்கள் காணொலி சந்திப்புகளை நடத்தும் முறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும், மாற்றும் வகையில், சந்திப்பு நிகழும்போதே அதைப் பற்றிய குறிப்புகளைப் பகிரவும், யூடியூப், ஃபேஸ்புக்கில் நேரலை செய்யவும் வசதிகளை சேர்த்திருக்கிறோம். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அவர்களை ஈர்க்க உதவும். மேலும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணினி அல்லது மொபைல் பிரவுஸரின் மூலமே அவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பில் இருக்க வழிவகை செய்கிறது ” என்றார்.
முகாவில் பல்வேறு அம்சங்கள் உள்ளதாகப் பட்டியலிடுகிறார் திருச்சி டெல்.கணேசன்.
முகாவின் குறிப்பிடத்தக்க 10 அம்சங்கள்:
1. அவரவர் நாட்டிலேயே சர்வர்கள் இருப்பதால் ‘முகா’ மிகவும் பாதுகாப்பானது.
2. உங்கள் பதிவுகளை க்ளவுடில் பதிவேற்றுவதன் மூலம் உங்கள் பேண்ட்வித்தை மிச்சப்படுத்தலாம்.
3.
இந்த காணொலி சந்திப்பு தளத்தின் விலை நியாயமான வகையில், வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 2 மாதங்களுக்கு இலவசமாக இதனைப் பயன்படுத்தலாம்.
4. மீட்டிங் நடத்துவதற்கான நேரக் கட்டுப்பாடே இல்லை.
5.தனிப்பட்ட மற்றும் குழு செய்தி பரிமாற்றம்.
6. ஒரே கான்ஃபரன்ஸ் கணக்கின் மூலம் பல்வேறு சந்திப்பு அறைகளை, பதிவுகளை நிர்வகிக்கலாம்.
7. வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கும்.
8. சந்திப்புக்கான குறிப்புகளை, சந்திப்பில் பங்கேற்றவர்களின் பட்டியலை எளிதில் பதிவிறக்கம் செய்யும் வசதி.
9.வாடிக்கையாளர்களுடன் ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்க கைபா இன்னொவேஷன்ஸ் விரும்புகிறது. முதலில் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றார் போல தளத்தை வடிவமைத்துள்ளது.
10. முகாவை செயலி போல் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஒரே க்ளிக்கில் பிரவுசர் சார்ந்து இயங்கச் செய்யலாம்.
கைபா நிறுவனத்துக்கு தென்னிந்தியா முழுவதும் பரவலாக கிளை அலுவலகங்கள் இருப்பதால், அங்கிருக்கும் பணியாளர்களுக்கு இந்த சந்திப்பு தளத்தின் பெயர் இன்னும் பொருத்தமாக, எளிதில் சென்றையும்.
முகாவை பரிச்சார்த்த முறையில் பயன்படுத்த விருப்பம் இருந்தால் [email protected] என்கிற முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.
அல்லது www.mugavideo.com என்கிற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
மேலும் விசாரிக்க மற்றும் சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். www.mugavideo.com இணையதளத்தில் முகா குறித்த மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு: +91 90258 67116.