Wednesday, September 27
Shadow

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று ட்ரெய்லர் வரும் அக்டோபர் 26 அன்று வெளியாகிறது

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று ட்ரெய்லர் வரும் அக்டோபர் 26 அன்று வெளியாகிறது, என்ஓசி சான்றிதழ் வழங்கிய இந்திய விமானப் படைக்கு சூர்யா நன்றி

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது, ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது.

இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார்.

சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் அக். 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகிறது.