Saturday, October 5
Shadow

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் கலக்கும் இசையில் Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” !

டிரெய்லர் மூலம் ரசிகர் மனங்களை அள்ளிய “ட்ரிப்ள்ஸ்” முழு நீள இணையதொடர்  டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க வருகிறது. Disney Hotstar VIP  மற்றும்  Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும்  இணைய தொடரான  “ட்ரிப்ள்ஸ்” உடைய இறுதி வடிவம் கண்டு இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் உலகளவில் ரசிகர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்க ஆவலுடன்  உள்ளனர். வசீகரிக்கும் நட்சத்திர பட்டாளம், கண்கவர் காட்சிகள் தாண்டி இத்தொடரின் இசை ரசிகர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லரில் வந்த அட்டகாசமான பின்னணி இசையாகட்டும் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த “நீ என் கண்ணாடி” பாடலாகட்டும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசை அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறியதாவது…

மிக அற்புதமான இந்த இணைய தொடரான “ட்ரிப்ள்ஸ்” தொடரில் என்னை பங்கு கொள்ள வைத்ததற்கு தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் சாருகேஷ் ஆகிய இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உண்மமையில் இத்தொடருக்கு இசையமைக்கும்போது பல காட்சிகளுக்கு என்னாலேயே  சிரிப்பை அடக்க முடியவில்லை. காட்சிக்கு காட்சி நகைச்சுவை தெறித்தது. அது என்னிடமிருந்து மிகச்சிறந்த இசை வெளிவரவும் காரணமாக இருந்தது. இத்தொடரில் வெறும் காமெடி மட்டும் இல்லை அழகான காதலும், உணர்வுகளும் நிரம்பி உள்ளது அது இசையமைக்க மிகப்பெரும் பலமாக இருந்தது. Disney Hotstar VIP எனும் மிகப்பெரும் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த அழகான தொடரில் நானும் இணைந்து பணியாற்றிதை பெருமிதமாக உண்ர்கிறேன்.

வேடிக்கை நிரம்பிய காமெடி கலாட்டாவான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரில் ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா,ராஜ்குமார் மற்றும் மாதுரி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.