Monday, October 14
Shadow

இந்தியாவின் தலைசிறந்த பெண்களில் ஒருவரான உமா பிரேமனின் வாழ்க்கை படமாகிறது

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன். இந்திய குடியரசு தலைவர் தன் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கெளரவித்த பெண்மணிகளில் இவரும் ஒருவர். இப்படி பல சாதனைகளை செய்த இவரின் அசாதாரணமான வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது. இப்படத்தை டிராபிஃக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். இதை பற்றி அவர் கூறும் போது , ‘சகமனிதனை நேசிப்பதை விட ஆகசிறந்த தத்துவமோ, செயலோ எதுவுமில்லை என எண்ணுகிறேன். சுற்றியுள்ளவர்கள் தன்னை வேதனைக்குள்ளாக்கினாலும் அவர்களுக்கு அதீத அன்பையே பரிசளித்திருக்கிறார் உமா பிரேமன் அவர்கள். இப்படம் பல பேருக்கு உத்வேகமளிக்கும் என நம்புகிறேன்’.