Saturday, October 12
Shadow

“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்

திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம்.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு வழங்கியிருக்கிறது. இது பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது…

எனது திரைப்படத்திற்கு “கட்டில்” என்று பெயர் வைத்தவுடன் சிலர் வேறு மாதிரி பார்த்தார்கள்.. இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது இந்திய கலாச்சாரத்தின் உன்னதத்தை, தமிழக பாரம்பரிய நுட்பத்தை, குடும்ப உறவுகளின் மேன்மையை தெரிவிக்கும் விதமாக ஜனரஞ்சகத்தோடு கட்டில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று பலமுறை கூறி வந்தேன்… இந்த கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக கட்டில் திரைப்படத்திற்கு clear “U” தணிக்கை சான்றிதழை சென்சார் போர்ட் வழங்கியிருப்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்…

சமூகத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டு திரைப்படத்துறையில் அறுபது ஆண்டுகளாக பயணிக்கும் B.லெனின் அவர்கள் கட்டிலுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பையும் செய்திருக்கிறார். இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்…