Sunday, March 26
Shadow

சசிகுமார் நடிப்பில் வெற்றிமாறன் – எஸ்.கதிரேசன் இணைந்து தயாரிக்கும் புதியபடம்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து புதிய படத்தைத் தயாரிக்கின்றார்கள்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும்.ஏற்கெனவே, ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் தனது படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘டைரி’ படத்தை எடுத்து முடித்துள்ளார் . இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதுதவிர ‘ருத்ரன்’ என்றொரு படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தனது நிறுவனத்தின் எட்டாவது தயாரிப்பாக வெற்றிமாறனுடன் இணைந்து புதிய படத்தைத் தயாரிக்கிறார்.