Saturday, March 25
Shadow

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம்” D 43 ” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பம் !

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் .தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .

பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும் அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 வது முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது . முதல்நாள் படப்பிடிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் பாடிய பாடலுக்கு படப்பிப்பு நடைபெற்றது . பாடல் வரிகளை விவேக் எழுத , நடன இயக்குனராக ஜானி பணியாற்றுகிறார் .