Thursday, April 18
Shadow

சாம் ஹொய்” (Sam Hoi ) வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் CS !

இசையமைப்பாளர் சாம் CS, தனது தனித்தன்மைமிக்க இசையால் சினிமா உலகில் பெரும் பெயர் பெற்றிருக்கிறார். அவரது இசையில், திரைப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பிஜிஎம் மொழிகடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்துள்ளது. அவரது இசையில், பெரிய படஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் தற்போது உலக திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இயக்கும் வியட்நாமிஸ் படமான சாம் ஹொய் ( Sam Hoi ) படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS கூறியதாவது…

மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் கொஞ்சம் பதட்டமாகவும் உள்ளது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு உலக ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். உலக திரைப்படத்திற்கு இசையமைக்கும் இந்த அரிய வாய்ப்பு, சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் மூலம் தான் கிடைத்தது. இப்படத்தை அவர் தான் இயக்குகிறார். என் மேல் அவர் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு, நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உலகப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக, மேஜிக்கல் தருணமாக இருந்தது. படத்தில் தூள் பறக்கும் ஆக்சன் காட்சிகள் பாக்ஸிங் வளையத்திற்குள் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. எமோஷனல் காட்சிகளும் இப்படத்தில் உண்டு. அவை எனது திறமையை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இப்படம் வெளிவரும் முன்பே, வேறு பல உலகப்பட வாய்ப்புகளும், கொரியன் பட வாய்ப்புகளும் என்னை தேடி வந்துள்ளது, மகிழ்ச்சியை அளித்துள்ளது