சென்னையில் மிகப் பெரிய தாதாவாக இருப்பவர் நெப்போலியன் இவருடைய மகன் நாயகன் கார்த்தி சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட, தந்தையின் ரவுடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார் நாயகன் கார்த்தி படித்து வெளியூரில் வேலை பார்த்து வரும் கார்த்தி, விடுமுறைக்காக ஊருக்கு வரும் சமயத்தில் நெப்போலியன் இறந்துவிடுகிறார்.
நெப்போலியனுக்கு பின் இந்த ரௌடி கேங் கார்த்தி கையில் வருகிறது. ஆனால், அவர்களை ஒரு அடியாட்கள் போல பயன்படுத்திகொள்ளாமல், அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைஉயர்த்த நினைக்கிறார் கார்த்தி. இந்நிலையில் ஊர் விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் ஊர் கார்பெரேட் நிறுவனம் பிரச்சனை கொடுக்கிறது. இறுதியில் விவசாயத்தை ரௌடிகளை வைத்து கார்த்தி காப்பற்றினாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்தி இப்படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், நடனம் என அனைத்திலும் முத்திரை பதிக்கிறார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளை பந்தாடி இருக்கிறார். சுல்தான், ருக்மணி (ரஷ்மிகா மந்தனா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா அழகான கிராமத்து பெண்ணாக வந்து செல்கிறார். கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியனும், இவருக்கு நண்பராக வரும் லாலும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபு வழக்கம்போல நம்மை சிரிக்க வைக்கிறார். படத்தில் இரண்டு வில்லன்கள் இருந்தாலும் கதாபாத்திரத்தில் வலு இல்லாமல் போகிறது.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது யுவனின் பின்னணி இசை தான். சத்யன் சூரியனின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவற்றை திறம்பட கையாண்டுள்ளார். கதைக்களம் வித்தியாசமானதாக இருந்தாலும், கமர்ஷியல் படமாக இருந்தாலும் விவசாயத்தை பற்றிய கருத்துகளை கூறி பலம் சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சுல்தான்’காப்பவன்
நடிகர்கள் : கார்த்தி, ரஷ்மிகா மந்தனா ,லால், நெப்போலியன், யோகிபாபு, சதீஷ்
இசை : விவேக் – மெர்வின்:
இயக்குனர் : பாக்கியராஜ் கண்ணன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்