சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் மலேசியாவில் மாபெரும் அன்னதானம்!
மலேசியாவில் Dato Abdul Malik தலைமையில் இயங்கும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நிகழ்வாக நேற்றய தினம் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து RAAJI SILK PALACE மற்றும் DADDY ARUMUGAM RECIPE உணவகம் மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள் குழந்தைகள் காப்பகங்கள் , முதியோர் இல்லங்களில், சுவையான மற்றும் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட சிக்கன் பிரியாணி உணவு பொட்டலங்கள் அன்னதானமாக வழங்கினர் .மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .