ஸ்மார்ட்போன்களின் வருகையால் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளப் பக்கங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு, இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்களின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய ஆஃப்கள் பெரும்பாலும் இந்தியா அல்லாமல், பிற நாடுகளைச் சேர்ந்தவைகளாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட சீனா நாட்டை சேர்ந்த பல ஆஃப்க்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் ஒன்று மக்கள் அதிகம் பயன்படுத்திய Tik Tok என்பதால், அதன் பயன்பாட்டாளர்கள் ரொம்பவே அப்செட்டாகி விட்டார்கள். அப்படி அப்செட்டானவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
ஆம், டிக் டாக் பயன்பாட்டாளர்களுக்காக டிக் டாக்கை விட பாதுகாப்பான அதே சமயம் பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கும் சேர்த்து புதிய ஆஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ரீட்டோ (Reto) என்ற இந்த புதிய ஆஃப்பை சென்னையை சேர்ந்த
மூன்று பெண்கள் உருவாக்கியுள்ளார்கள்.
சென்னையை சேர்ந்த கனிணி பொறியாளரான ஃபேட்ரிஸியா என்ற பெண், டிக் டாக் இருக்கும் போதே அதற்கு போட்டியாக ஒரு ஆஃப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பணி முடியும் தருவாயில் டிக் டாக் தடை செய்யப்பட, தற்போது ஃபேட்ரிஸியா தான்
உருவாக்கிய Reto ஆஃப்பை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
டிக் டாக்கை விட அதிக வசதிகள் கொண்ட Reto ஆஃப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற வசதிகளுடன் சீக்ரெட் சாட்டிங் என்ற கூடுதல் வசதியும் இருக்கிறது. இந்த சீக்ரெட் சாட், மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மெசஜ் அல்லது வீடியோவை, ஸ்கீரின் ஷாட் கூட எடுக்க முடியாது. அதேபோல், சீக்ரெட் சாட்டில் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்து மெசஜ்
அனுப்பினால், அந்த மெசஜ் தானாகவே அழிந்து விடும்.
மேலும், தொழில்துறையை சார்ந்தவர்கள் தங்களது பொருட்களை இலவசமாக Reto ஆஃபில் விளம்பரம் செய்யலாம். அதேபோல், வெறும் பொழுதுபோக்கிற்கான வசதிகளை மட்டும் வைக்காமல், இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக ரீட்டோ
சேலேஞ்ச் மூலம் நடனம், பாட்டு, நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தவும் செய்யலாம்.
இந்த புதிய அசத்தல் Reto ஆஃப் அறிமுக நிகழ்ச்சி, அக்டோபர் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகை இந்துஜா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு Reto ஆஃப்பை அறிமுகம் செய்து வைதார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை இந்துஜா, “சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உருவாக்கிய ரீட்டோ ஆஃப் அறிமுக விழாவில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. பல வெளிநாட்டு ஆஃப்க்களை பயன்படுத்தும் நம் மக்கள், நமது நாட்டு ஆஃப்பான Reto-வுக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நான், டிக் டாக் ஆஃப்பை பயன்படுத்தியதில்லை, ஆனால் நிச்சயம் Reto-வை
பயன்படுத்துவேன்.” என்றார்.
Reto ஆஃப்பை உருவாக்கிய Trifft Solution நிறுவனத்தின் உரிமையாளர் ஃபேட்ரிஸியா பேசுகையில், ”இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்பாக மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினருக்குமான ஒரு ஆஃப்பாகவும் ரீட்டோவை உருவாக்கியுள்ளோம். இதில்,
அனைத்து வசதிகளும் உள்ளது. ரீட்டோ என்று பெயர் வைக்க காரணம், ரீட்டோ என்றால் சேலேஞ்ச் ஆகும். இந்த சேலேஞ்ச் மூலம் இளைஞர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான அம்சங்களையும் இதில் வைத்துள்ளோம்.
அதேபோல், பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் உள்ளது. எங்கள் சர்வர் முழுவதும் இந்தியாவில் இருப்பதால், Reto-வை பயன்படுகிறவர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்கும். மேலும், எதாவது செய்தி அல்லது தகவல் மீது புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். மொத்தத்தில், பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பு நிறைந்த Reto அனைத்து தரப்பினருக்கும் பயன் உள்ள ஆஃப்பாக இருக்கும்.” என்றார்.