Monday, September 9
Shadow

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேனாண்டாள் முரளி வெற்றி

!தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி, தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி, தேனப்பன் தலைமையிலான அணி என மூன்று அணிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

டி.ராஜேந்தர் 338 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.