‘திருவின் குரல்’ திரைப்பட விமர்சனம்
‘திருவின் குரல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விஷயத்தை வைத்து கிரைம் ஆக் ஷன் திரில்லர் படமாக வந்துள்ளது திருவின் குரல். அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் பிரபு இயக்கி உள்ளார். ஓரளவு காது கேட்கும் வாய் பேச முடியாத இளைஞன் திரு (அருள்நிதி) அத்தை பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
திடீரென அப்பா மாரிமுத்துவிற்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் இருக்கும் கடைநிலை ஊழியர்களான நால்வர் திரைமறைவில் பல்வேறு கொலை, கொள்ளை போன்ற வேலைகளை செய்கிறார்கள். திரு வீட்டு பெண்களிடம் தவறான பாலியல் கண்ணோடத்துடன் பார்க்கிறார்கள். இதனால் திரு இவர்களை அடிக்கிறார்.
இந்த நால்வரும் செய்யும் ஒரு கொலையை திருவின் அக்காவின் மகள் பார்த்துவிட, இந்த பெண்ணையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது இந்த டீம். திருவை திசை திருப்பவும், பழி வாங்கவும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள திருவின் அப்பாவிற்கு தவறான மருந்துகள் செலுத்தி திருவை பாடாய்படுத்துகிறார்கள்.