Sunday, October 13
Shadow

தெருக்கோடியில்பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதை “ முன்னா “

 

சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா ? நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்கு கிடைத்ததா ? என்ற கேள்விகளுக்கான விடைதான் “ முன்னா “

தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த “முன்னா “ திரைப்படம்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்து இப்படத்தை இயக்கியுள்ளார் சங்கை குமரேசன். ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பாடல்களுக்கான இசையினை D.A.வசந்த்தும், பின்னணி இசையினை சுனில் லாசரும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவினை ரவியும், நடனத்தை கென்னடி மாஸ்டரும், எடிட்டிங்கை பத்மராஜும் மேற்கொண்டுள்ளனர்.

நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம்,வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர். நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள் அதே போல் இந்த முன்னா படமும் மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும் என்கிறார் இயக்குனர் சங்கை குமரேசன். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.