Friday, January 17
Shadow

நடிகர் தவசி காலமானார்..!

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நடிகர் தவசி காலமானார்.

நடிகர் தவசி உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் தவசி காலமானார்.

நடிகர் தவசியின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி செய்தனர். தவசி வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை, ரஜினிமுருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.