இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது.
மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.
“பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.
தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர்கள் & தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
இயக்கம் – சுதா கொங்கரா
எழுத்து – ஷான் கருப்பசாமி, சுதா கொங்கரா
நடிகர்கள் – பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ்.
இயக்கம் – விக்னேஷ் சிவன்
எழுத்து – விக்னேஷ் சிவன்
நடிகர்கள் – அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார்
இயக்கம் -வெற்றி மாறன்
எழுத்து – வெற்றி மாறன்
நடிகர்கள் – ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி.
இயக்கம் – கௌதம் வாசுதேவ் மேனன்
எழுத்து – கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் – கௌதம் வாசுதேவ் மேனன் சிம்ரன்.
tflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.
RSVP Movies
RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்பது நாம் இங்கு சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர்கள் இணையவெளியில் தாங்கள் பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக, வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிகொண்டே இருக்கவேண்டும் என்பதாகும்.
ஆஷி துவா சாரா தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய சுதந்திரமாக இயங்கும் நிறுவனம் தான் Flying Unicorn Entertainment ஆகும். ஆஷி துவா சாரா தான் இந்தியாவில் முதன் முதலில் ஆந்தாலஜி படைப்பை, பாலிவுட்டின் முக்கிய ஆளுமைகளான ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப், மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில் பாம்பே டாக்கீஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றை உருவாக்கினார். மேலும் இவர் சஃய்ப் அலிகான் நடிப்பில் உருவான ப்ளாக் காமெடி படமான காலக்காண்டி படத்தை தயாரித்துள்ளார்.