Monday, September 9
Shadow

பழம் காய்கறிகளை கொண்டு டிச-28ல் ஃபேஷன் ஷோ மற்றும் ஒப்பனை போட்டி!

தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக 21 வருட அனுபவம் கொண்டவர் இவர்.

தற்போது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவற்றை சென்னையில் நடத்துகிறார் நவீன ஒப்பனை போட்டி மற்றும் சங்கமம் 2020 விழா என்கிற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே பழம் மற்றும் காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் ஒப்பனை செய்யப்பட இருக்கிறது என்பதுதான்.

மேலும் இந்தத் துறையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த ஒப்பனைக் கலைஞர்கள் மற்றும் அழகு கலை நிபுணர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.