Tuesday, July 27
Shadow

பாக்கியம் சினிமா 10 ஆம் ஆண்டு தொடக்க விழா

பாக்கியம் சினிமா 10ம் ஆண்டு தொடக்க விழா 24-2-2020 புதன்கிழமை அன்று சென்னை, வடபழனி, குமரன் காலனியில் உள்ள சிகம் ஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு 10-ம் ஆண்டு சிறப்பு இதழை வெளியிட்டார். சிகரம் சந்திரசேகர் பெற்று கொண்டார். விழாவில் சிறுவர்களின் சிலம்பாட்டம் நடன நிகழ்ச்சி மிமிக்கிரி என பல நிகழ்வுகள் நடந்தது. பாக்கியம் சினிமா விருது பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு இயக்குனர் பேரரசு வழங்கினார். சௌத் இந்தியன் வெப் சீரிஸ் மேக்கர்ஸ் அசோசியேஷன் தலைவர் M.ஹரிதாஸ், துணைதலைவர் M.குமார், செயலாளர் H.முருகன், பொருளாளர் சாமிநாதன், துணை செயலாளர் Dr அக்பர்கான் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் PRO யூனியன் தலைவர் N.விஜயமுரளி இயக்குனர் மங்கை அரிராஜன், தயாரிப்பாளர் PRO மதுரை செல்வம், PRO டைமண்ட் பாபு, ஒளிப்பதிவாளர், இயக்குனர் பகவதிபாலா, இயக்குனர் அரசு, வினியோகஸ்தர் S.மோகநாதன், வழக்கறிஞர் மோகன்குமார், தயாரிப்பாளர், நடிகர் கோவூர் ரவி, சின்னதிரை நடிகை சிந்துஜா, PRO சூரியா, MP நூர்முகமது, J.S.சீனிவாசன், எட்வின் இன்பராஜ், ஆ.செந்தில், சமீர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பித்தனர். நன்றியுரை பாக்கியம் சினிமா ஆசிரியரும், வெளியீட்டாளரும், இயக்குனரும், நடிகருமான H.முருகன் (எ) விண்ஸ்டார் விஜய் தெரிவித்தார்.

பாக்கியம் சினிமா 10 ஆம் ஆண்டு தொடக்க விழா

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *