Sunday, October 13
Shadow

யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது “மூக்குத்தி அம்மன்”

‘லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

“மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில், இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவதென்பது எந்த ஒரு திரைப்படகுழுவும் நினைத்தே பார்த்திராத பணியாகும். நல்லவேளையாக படத்தின் இப்பகுதியை இந்த பொது முடக்க காலத்திற்கும் முன்னதாகவே படமாக்கியதில் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.

“மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி, NJ சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ளார். . நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் RJ பாலாஜி முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்

படத்தொகுப்பு – செல்வ RK

சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா

கலை இயக்கம் – விஜயகுமார் R

பாடல்கள் – பா. விஜய்

எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – அஷ்வின் குமார் K

ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம்

உடை வடிவமைப்பு – அனு வர்தன், திவ்யா நாகராஜன்

புரடக்சன் கண்ட்ரோலர் – KS மயில் வாகனன்

லைன் புரடியூசர் – விக்கி

ஸ்டில்ஸ் – E ராஜேந்திரன்

பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கபிலன்

ஆடியோ லேபிள் – திங்க் மியூசிக்

டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் நவம்பர்14, 2020 அன்று தீபாவளி நன்நாளில் ப்ரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகிறது.