ஸரோமி மூவி கார்லேண்டு நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘ரூட்டு’
இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் மக்களிடையே வரவேற்பைப் பெற தவறிவிட்டது.