Thursday, January 16
Shadow

‘லெஜெண்ட்’ திரைப்பட விமர்சனம்

‘லெஜெண்ட்’ திரைப்பட ரேட்டிங்: 2/5

படக்குழு:

நடிகர்கள்: ‘Legend’ சரவணன், ஊர்வசி ராவ்டேலா, பிரபு, விவேக், சுமன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: ‘Legend’ சரவணன்

இயக்கம்: ஜேடி & ஜெர்ரி.

வெளிநாட்டில் விஞ்ஞானியாக பணிபுரிந்த சரவணன் அருள் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். தனது நண்பன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு வேதனை அடைகிறார். விஞ்ஞானியான சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனை பிடிக்காத சிலர் ஹீரோவின் மனைவியை கடத்தி செல்கின்றனர்.

கடத்தி செல்லப்பட்ட மனைவியை கண்டுபிடிக்கிறாரா? சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறதா? என்பது தான் தி லெஜன்ட் படத்தின் கதை. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் முதல் முறையாக ஹீரோவாக தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளனர். சரவணனுடன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ரோபோ சங்கர், ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, யோகி பாபு, பிரபு என பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.


தி லெஜண்டைச் சுற்றியிருக்கும் பரபரப்பானது அதன் முன்னணி நாயகன், தொழில்முனைவோர் சரவணன், திரைப்பட நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மட்டுமே. ஒரு ஹீரோவுக்குத் தேவையான அனைத்தையும் சரவணன் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் – சண்டை, காதல், நடனம், பஞ்ச் டயலாக்குகள் (“எனக்கு பதவி முக்கியம் இல்லங்க.. மக்கள் தான் முக்கியும்”) மற்றும் உணர்ச்சிவசப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் மேக்கப்பில் இருப்பது செயற்கை ஆக்குகிறது .மறைந்த விவேக் ஒரு சிறந்த இறுதிப் படத்திற்கு தகுதியானவர் என்றாலும் யோகி பாபு நகைச்சுவையாக இல்லை.

நாசர், விஜயகுமார், தேவதர்ஷினி, சச்சு மற்றும் தம்பி ராமையா போன்ற மூத்த நடிகர்கள் அதிக சம்பள காசோலையில் பணம் எடுப்பது போல் தோன்றும் போது கீதிகா மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் இடம் இல்லாமல் இருக்கிறார்கள். மறைந்த விவேக் ஒரு சிறந்த இறுதிப் படத்திற்கு தகுதியானவர் என்றாலும் யோகி பாபு நகைச்சுவையாக இல்லை.

வில்லன் கதாப்பாத்திரத்தில் சுமன் நடித்துள்ளார். குடும்பம், காதல், சென்டிமென்ட் என முதல் பாதி நகர்கிறது. விஞ்ஞானம், மருந்து, பழி வாங்குதல் என இரண்டாம் பாதி நகர்கிறது. 5 பாடல்கள், 6 சண்டை காட்சி என இந்த வயதிலும் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் சரவணன்.

இறுதியாக ‘தி லெஜண்ட்’ படம் எப்படி என்றால்? மேக்கிங்கில் பணத்தை வாரி இறைத்து செலவு செய்துள்ள இந்த படக்குழு கதை, திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் போட்ட பணத்திற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.