Wednesday, September 27
Shadow

வரிசி முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு.

கார்த்திக் தாஸ் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம்.

வரிசி என்றால் என்னவென கேட்டதற்கு வரிசி என்றால் மீனவர்கள் மொழியில் தூண்டில் என்று கார்த்திக் தாஸ் கூறினார். இத்திரைப்படம் காதல், நட்பு, நகைச்சுவை, திகிலென பல்சுவைகளின் விருந்தாகவிருக்கும். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் அவலங்களை பற்றியும் வலுவாக பேசும்.