Wednesday, June 7
Shadow

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக தனிமைப்படுத்தலை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சமூக தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 144 தடை உத்தரவால் பல்வேறு தரப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.