இயக்குனர் திரு.P.S.மித்ரன் இயக்கத்தில் நடிகர் திரு.கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் திரு.கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் திரு. S.லக்ஷ்மன் குமார் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.