‘நித்தம் ஒரு வானம்’ பட ரேட்டிங்: 3.5/5
வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இன்று வெளியாகி உள்ள‘நித்தம் ஒரு வானம்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
![](https://bakkiyamcinematv.com/wp-content/uploads/2022/11/Nitham_Oru_Vaanam.jpg)
இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிதா ராஜசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டையின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்ட கதை.
அசோக் செல்வன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.
அசோக் செல்வனுக்கு திருமணம் செய்து வைக்க பெண்ணை முடிவு செய்கின்றனர். மறுநாள் காலையில் அந்த மணப்பெண் தனது காதலனுடன் செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார்.
இதனால் விரக்தியில் இருக்கும் அசோக் செல்வன் ஒரு மருத்துவரை சந்திக்கிறார். அந்த மருத்துவர் அசோக்கிடம் ஒரு சிறுகதைகளை கொடுத்து படிக்க சொல்கிறார். அந்த கதைகளில் முடிவுகள் கிழிக்கப்பட்டிருக்கிறது.
அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்தில் மருத்துவரிடம் அதைப் பற்றி கேட்கிறார். அதற்கு அந்த மருத்துவர் இது கதை அல்ல உண்மை என கூறுகிறார். அந்த உண்மையைத் தேடி பயணம் செய்யும் அசோக் செல்வனுக்கு கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை படத்தின் மீது கதை.
மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கெட்டப்களில் அசோக் செல்வன் அசத்தியுள்ளார். ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா என மூன்று பெண் கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியமானதாக உள்ளது.
அறிமுக இயக்குனர் கார்த்திக் ஒரு காதல் கதையை வாழ்க்கை கதையாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் டிராவல் நிறைந்த திரைக்கதையோடு படம் நகர்ந்து கடைசியில் நெகிழ்வான படமாக முடிந்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து நிச்சயம் நித்தம் ஒரு வானம் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.