‘காபி வித் காதல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து இன்று வெளியாகியுள்ளது ‘காபி வித் காதல்’
ஸ்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூன்று பேரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருக்கும் டிடி தங்கையாக இருக்கிறார். கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் இருக்கிறார். ஆசை குறைந்து விடுகிறது. அவருடைய மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம், வசதியாக இருக்கும் ஜீவாவை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் சிறு வயதிலிருந்து தன்னை உருகி உருகி அமிர்தா ஒருதலையாக காதலிக்கிறார்.
ஆனால், ஜெய் அவர் காதலை புரிந்து கொள்ளவில்லை. ஜெய்க்கு பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடம் பார்க்கிறார். அந்த இடத்தின் உரிமையாளர் மகளை பார்க்கிறார். கனவிற்காக திருமணம் செய்து கொள்ள ஜெய் ஒத்துக் கொள்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா அந்த பெண்ணை காதலிக்கிறார். இருவருமே காதலிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஜீவா, ரைசாவை தான் திருமணம் முடிவெடுக்கிறார். ஆனால், ரைசாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணா ஸ்ரீகாந்த் என்பது தெரிகிறது. இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள்? யார் யாரை பிரிந்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடிதான். ஆனால் முந்தைய படங்களை விட இந்த படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக சிரிப்பை ஏற்படுத்தாததாக தெரிகிறது. யோகிபாபு, கிங்ஸ்லி காமெடி காட்சிகளில் ஒரு சில இடங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. முழுவதும் காமெடியாக பயணித்துவிடுவதால் சில கதாப்பாத்திரங்களின் உணர்வுகளோடு ஒன்றமுடிவதில்லை.