‘யசோதா’ திரைப்பட ரேட்டிங்: 3/5
சமந்தா முக்கிய முன்னணி கேரக்டரில் நடித்த ‘யசோதா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீலிஸ் (Yashoda Movie Review Tamil) ஆகியது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் என பல நட்சத்திரத்தின் நடிப்பில் இரண்டு இயக்குநர் ஹரி மற்றும் ஹரிஷ் படைப்பில் உருவாகியது. உலகம் முழுவதும் ரிலீஸான ‘யசோதா’ படத்தின் நிறை குறை படம் எப்படி இருக்குதுனு தெரிஞ்சுக்க இந்த பதிவை சரியான தேர்வு தான். வாங்க…! விமர்சனத்திற்கு போவோம்.
இன்று இருக்கும் அவசர உலகில் வாடகைத்தாய் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை த்ரில்லர் ஜானரில் வெளிப்படுத்தும் கதையே ‘யசோதா’ ஆகும். இந்த வாடகைத்தாய் விவகாரத்தில் சமந்தா எப்படி சிக்கிக் கொள்கிறார், அதில் இருக்கும் பின்னணியின் உண்மைகள் வெளிச்சம் செய்வது தான் திரைக்கதையாக உள்ளது.
த்ரில்லர் கதைக்கு உரிய சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லரை இறுதிவரை கொண்டுவந்தது தான் ‘யசோதா’ படத்திற்கு பலமாகும். ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் மர்மத்தில் ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்தாலும் போக்கில் தன் விருவிருப்பைக் கூட்டி செல்வது ரசிக்கும்படி உள்ளது.
இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்பத் வருகிறார். பணத்திற்காக வாடகைத்தாயாக இருக்க ஒத்துக்கொள்ளும் சமந்தா, பின் இதில் இருக்கும் வியாபாரத்தை அறிந்த பின் என்ன ஆகிறது என்பதே படத்தில் சுவாரஸ்யம் ஆகும்.
கொலை விசாரணை மற்றும் வாடகைத்தாய் விவகாரம் இரண்டும் குழப்பாமல் முதல் பாகம் உணர்ச்சியாக நகர்கிறது. ஆரம்பத்தில் இருந்து தனக்கு ஏற்படும் சிக்கலை சமந்தா உணரும் அந்த வாடகைத்தாய் விவகாரம் தான் இரண்டாம் பகுதிக்கு ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.
சமந்தாவின் இரு மாதிரியான கதாபாத்திர நடிப்பு மற்றும் வரலட்சுமியின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. ‘இவா’ என்னும் இந்த வாடகைத்தாய் மையத்தில் பணிபுரியும் டாக்டர் கேரக்டரில் உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். இவரின் கேரக்டரின் அழுத்தம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது, விருவிருப்பான சூழலை பின்னணி இசை நமக்கு தத்துருப்பமாக உணர்த்துகிறது.
மொத்தத்தில் வாடகைத்தாய் விவகாரத்தில் இருக்கும் மர்மங்களைக் கூறும் மிகவும் சாதாரணமான கதை வைத்து, சுவாரஸ்யம் மங்காமல் எடுத்து சென்ற இயக்குநர்களுக்கு பாராட்டுகள்.