Thursday, April 18
Shadow

‘பரோல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

 

நம் ஆழ் மனதில் சில கருத்துகள் தவறாக பதியும் என்பது மறுக்கத்தக்கது இல்லை. அதுபோல வடசென்னை என்றாலே ரவுடிஸம் என்று சினிமா காட்டியது, இந்த கருத்துக்கு எதிராக பல எதிர்க்கருத்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் சென்னையை மையமாக கொண்டு வெளியாகும் ரவுடிஸம் படத்தில் வடசென்னை கொண்டு வருவது வழக்கமாக மாறியுள்ளது. மீண்டும் வடசென்னை என்றாலே ரவுடிஸமா..? என்ற கேள்வியை உருவாக்கி வெளிவந்த ‘பரோல்’ திரைப்படத்தின் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

அண்ணன் லிங்கா மற்றும் தம்பி கார்த்திக் இருவரும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும் அண்ணன் தம்பிகளாக உள்ளனர். லிங்கா முக்கிய குற்றவாளியாக சிறையில் உள்ளார், இவரது அம்மா எதிர்பாராத விதமாக இறந்துவிட தம்பி கார்த்திக் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பரோல் கிடைத்ததா? இல்லையா? என்பதே பரோல் படத்தின் கதை.  கார்த்திக் மற்றும் லிங்கா இருவருக்கும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதையாக பரோல் படம் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி இருவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு பெண் கதாபாத்திரங்களும், படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியதும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

ஒரு பரோல் கிடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உண்மைக்கு சற்று விலகாமல் கதையிலும் புகுத்தி உள்ளார் இயக்குனர் துவாரக் ராஜா.  படத்தில் திரைக்கதை பரோல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  வடசென்னை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் பரோல் படம் அதில் தனித்துவமான உள்ளது.  ஆக்சன் காட்சிகளும் சரி, சென்டிமென்ட் காட்சிகளும் சரி சிறப்பான முறையில் திரையில் காட்டப்பட்டுள்ளது.  நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த கதையை ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்துள்ளார் இயக்குனர், இப்படி பட்ட கதையை சரியான சரியான முறையில் எடிட் செய்த எடிட்டருக்கும் தனி பாராட்டுக்கள்.

 

படத்தின் கேமரா ஒர்க், பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.  செட் ஒர்க் இல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கி படத்தை எடுத்துள்ளனர்.  கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் ஹியூமர் பல இடங்களில் நன்றாக வொர்க் ஆகியுள்ளது.  குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சி பிரமாதம். படத்தின் பட்ஜெட் கருதி சில காட்சிகளை தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை கதைக்கு எந்தவித தொய்வையும் ஏற்படுத்தவில்லை. அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் சண்டை பலருக்கும் ஒத்து போகும்.