பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 Production Dr. பிரபு திலக் அவர்கள். தற்போது இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரது “பார்டர்” படத்தை தனது நிறுவனம் மூலம் வெளியிடவுள்ளார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் இப்படம், வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தாக தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் “யாவரும் வல்லவரே” எனும் புதிய படததை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்க, அவரக்ளுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
11:11 Production சார்பில் Dr. பிரபு திலக் இது குறித்து கூறியதாவது…
“வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” படங்களின் பிரமாண்டமான வெற்றி, தரமான படைப்புகளை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள், என்கிற நம்பிக்கையையும், மேலும் சிறந்த கதைகள் கொண்ட படங்களை உருவாக்கும் ஊக்கத்தையும் தந்துள்ளது. மேலும் எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியகும், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பார்டர்” படத்தின் முன் வெளியீட்டு பணிகளுக்கு, ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த உற்சாக தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக “யாவரும் வல்லவரே” படத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். மேலும் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் இப்படத்தை பெரிய திரையில் காணும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக இப்படைப்பில் இணைய ஒப்புகொண்டதற்கு இது தான் முதன்மை காரணம். இது தவிர சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள தமிழின் முன்னனி நட்சத்திரங்கள் இப்படத்தை ஒரு உயர்ந்த படைப்பாக மாற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
சமுத்திரகனி மற்றும் யோகி பாபு ஆகியோருடன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவராசு, போஸ் வெங்கட், மெயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் Jais (ஒளிப்பதிவு), N.R. ரகுநந்தன் (இசை), ராம் ROA (படத்தொகுப்பு), பொன் முதுவேல், தீபா செல்வா, ஆதிராய் (பாடல்கள்), GV.பிரகாஷ்குமார், N.R. ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார் (பாடகர்கள்) ஆக பணியாற்றுகின்றனர்.