Sunday, November 3
Shadow

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறோம்.

தமிழக மக்களுக்கென பிரத்யேகமாக தமிழ்நாட்டில் உருவெடுக்கும் முதல் ஓ.டி.டியாக,

புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசக்காட்சிகள் இவை எதுவும் இடம்பெறாத குடும்பங்களுக்கான ஓ.டி.டி.யாக,

தொடங்கும் முதல் நாளிலேயே, புத்தம் புதிதாய் 5 வெப் சீரிஸ்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இடம்பெறும் ஓ.டி.டி.யாக – பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் – BS Value இருக்கப்போகிறது.

நிகழ் ஆண்டில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களை வெளியிட இருக்கும் ஓ.டி.டி.யாகவும் இந்த ஓ.டி.டி. இருக்கப் போகிறது.

இதில், பிளாக்‌ஷீப் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, தமிழக டிஜிட்டல் ஊடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பலரின் வீடியோக்கள், அவர்களின் அடுத்தடுத்த படைப்புகளும் இடம் பெற இருக்கின்றன.

இந்த BS Value ஓ.டி.டி நிறுவனம் தொடங்கப்படும் ”விண்ணுக்கும் மண்ணுக்கும்” நிகழ்வை, பிளாக்‌ஷீப் நிறுவனம் ஒரு வித்தியாசமான முறையில் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

அவர்களின் இந்த ஓ.டி.டி. யைத் தொடங்கும் ‘பிளாக்‌ஷீப் – விண்ணுக்கும் மண்ணுக்கும்’ நிகழ்ச்சியில் – மூன்று சாதனைகளையும் அரங்கேற்றி வருகின்றனர்

1.       சென்னைக்கு அருகில், 20 ஏக்கர் பரப்பளவில், 1,10,000 மரங்களோடு, “பிளாக்‌ஷீப் ஃபாரஸ்ட்” என்ற பெயரில் உலகிலேயே யூடியூபர்களால் உருவாக்கப்படும் முதல் மக்கள் முதலீட்டுக் காடு

2.       இந்தியாவிலேயே முதல்முறையாக, விண்ணில் தொடங்கப்படும் ஒரு BRAND

3.       நவம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இடைவிடாது 110 மணி நேர தொடர் நேரலையை நடத்தும் உலக சாதனை முயற்சி

மேற்குறிப்பிட்டு இருக்கும் இந்த மூன்று சாதனை முயற்சிகளையும் இன்றிலிருந்து தொடங்கி பிளாக்‌ஷீப் குழுவினர் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த சாதனை முயற்சிகளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் தங்களது வாழ்த்துகளை நேரிலும் சமூக ஊடகங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

பிளாக்‌ஷீப் குழுவினரின் இந்த 110 நேர தொடர் நேரலையை, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், பிளாக்‌ஷீப் யூடியூப் பக்கத்தில் கண்டு வருகின்றனர்.

முன்னணியில் இருக்கும் பல ஓ.டி.டி. தளங்களுக்குப் போட்டியாக, புதிய ஓ.டி.டி.யை தமிழகத்தில் பல கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் தொடங்கியிருப்பதை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.