Monday, September 9
Shadow

பிரபல திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்திரி!

ஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துக்கொள்வதுண்டு.

அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு படத்தை இயக்குதல். அதில் சவாலான விஷயம், 50 மணி நேரத்திற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட கதை வகையில் தனது குழுவினரின் துணைக்கொண்டு புதிய கதையை விவாதித்து பின் அதை படமாக உருவாக்க வேண்டும்.

இந்த போட்டியில் நடிகை காய்த்திரி ரோட் டு தும்பா (Road To Thumba) எனும் குறும்படத்தை இயக்கி Gold Film of the Year விருதை பெற்றுள்ளார்.

‘Stop at Nothing’  என்று தலைப்பு தரப்பட்ட வகையில் கதையை தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட  மொபைல் போன் கேமரா (One Plus) மூலம் இப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

நடிகை காயத்திரி கூறுகையில், “தரப்பட்ட 50 மணி நேரத்தில் 20 மணி நேரம் கதை விவாததிற்கே செலவாகி விட்டது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சுயசரிதையில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை எடுக்க நினைத்தேன். பின் அவர் மிதிவண்டியில் ராக்கேட் பாகங்கள் எடுத்து செல்வது போன்ற புகைப்படத்தை பார்த்தேன். பின் அதன் பின்னனியை அடிப்படையாக கொண்ட கதையை முடிவு செய்தோம்.

இந்தியாவில் முதல் ராக்கேட்டை விண்வெளியில் செலுத்த சரியான இடம் அமையாத காலத்தில், ஒரு தேவாலயம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்கின்றனர். ஆலயம் உள்ள அந்த இடத்தை பெற முடிந்ததா? ஆன்மிகமும் – அறிவியலும் இரு துருவங்கள், ஆனால் நாட்டிற்காக இவை இரண்டும் ஒன்றினைந்ததா என்ற நிஜ வரலாறின் பின்னனியில் இப்படத்தை இயக்கினேன்.

தேவாலயத்தின் பாதிரியார் வேடத்தில நடிகர் பகவதி பெருமாளும் (பக்ஸ்), விக்ரம் சாராபாய் வேடத்தில் நடிகர் T.M.கார்த்திக்கும் நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது. மேலும் பகவதி பெருமாள் பேசிய வசனங்கள் பெரும்பாலும் அவரே எழுதினார். இறுதியில் பாதிரியார் பேசும் வசனங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த வசனங்களை தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு பிரபல யூடுபர் அப்துல் லீ உதவி செய்தார்.

இந்த குறும்படத்தின் ஒளிப்பதிவை கழுகு படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் மேற்கொண்டார். இசை அனிருத் விஜய்.

இந்த விருது எனது குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தது. இப்படத்தை தேர்வு செய்த போட்டி நடுவர்களுக்கும், India Film Project தளத்திற்க்கும் எங்களது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.’ என்று கூறினார்