அண்ணாத்த,வாரிசு,வாத்தி திரைப்பட தொடர் தோல்வியால் பி.ஆர்.ஓ வை மாற்றலாமா என்று யோசிக்கும் முன்னணி நட்சத்திரங்கள்.
‘வாத்தி’ திரைப்பட ரேட்டிங்: 2/5
படம்: வாத்தி
நடிப்பு: தனுஷ், சமுத்திரகனி, பாரதிராஜா, சம்யுக்தா, சாய்குமார், தணிகலபரணி, தோட்டபள்ளி மது, நர்ரா ஶ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெரேடி, கேன் கருணாஸ், பிரவினா லலிதாபாய், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஷாரா பவிஷ்
தயாரிப்பு: தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்சூன் போர் சினிமாஸ்
இசை: ஜி. வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு:ஜே.யுவராஜ்
இயக்கம்: வெங்கி அட்லூரி
பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்
1990 களில் அரசு பள்ளிகள் மாணவ மாணவிகள் ரொம்பவும் படிப்பில் பின்தங்கியிருக்க தனியார் பள்ளியில் படிப்பவர்கள் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுகின்றனர். அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். சமுத்திரக் கனி பள்ளியை சேர்ந்த துணை ஆசிரியர் தனுஷ் சோழவரம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படு கிறார். அந்த பள்ளிக்கு வரும் தனுஷ் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 9, 10ம் வகுப்புக்கு பிறகு கூலி வேலைக்கு செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். எல்லோரையும் நன்கு படிக்க வைத்து உயர் படிப்புக்கு அனுப்ப சபதம் செய்கிறார். அதற்காக மாணவ, மாணவி களுக்கு கடும் பயிற்சி அளித்து தகுதியானவர்களாக்குகிறார். அதைக்கண்டு அதிர்ச்சி அடையும் சமுத்திரக்கனி தனுஷின் முயற்சியை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார். இதில் தனுஷ் வென் றாரா, சமுத்திரக்கனி வென்றாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
தனியார் பள்ளியை நடத்தி வரும் சமுத்திரகனி அரசு பள்ளிகளை முடக்க சதித்திட்டம் செய்து பலனற்று போகும் நிலையில், அரசு பள்ளிகளை தத்தெடுத்து இலவசமாக கல்வி கொடுக்கிறேன் என்கிற பெயரில் மொக்கையான ஆசிரியர்களை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்க பார்க்கும் வில்லனாக வருகிறார்.அப்படி மொக்கை ஆசிரியர் என அனுப்பி வைக்கப்படும் தனுஷ் தான் செல்லும் ஒரு ஊரில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுத்து அங்குள்ள மாணவர்களை எப்படி படிக்க வைத்து அசத்துகிறார் என்றும் சமுத்திரகனியின் சதி திட்டத்திற்கு எதிர்ப்பாக மாறுகிறார் என்பதும் தான் வாத்தி படத்தின் கதை.
இந்த படத்தில் கமர்ஷியல் கலந்து, போர் அடித்து விடாமல் ஹீரோயிசம், ரொமான்ஸ், காமெடி என அனைத்தையும் வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி மேட்ச் பண்ணி உள்ளார்.காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என்பது போல தெலுங்கு இயக்குநரின் படத்தில் ஓவர் தெலுங்கு வாடை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்றாலும், தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி படத்தை பார்க்க சென்ற ஜெனரல் ஆடியன்ஸையும் படம் கவர்கிறது.
கருத்துக்கு கருத்து இருக்கு, கமர்ஷியலுக்கு கமர்ஷியல் இருக்கு, சம்யுக்தா மேனன் அழகுக்கும் ஜிவி பிரகாஷ் இசைக்குமே இந்த படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்!
மொத்தத்தில் வாத்தி – சுமாரான திரைப்படம் தான்.