‘கொன்றால் பாவம்’திரைப்பட ரேட்டிங்: 2.5/5
தர்மபுரி அருகே 1981ம் ஆண்டு நடக்கும் கதை இது. சார்லியும் அவரது மனைவி ஈஸ்வரியும் கிராமத்தில் ஒரு ஓரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமண வயதைக் கடந்த ஒரு பெண்ணாக வரலட்சுமி இருக்கிறார். மிகவும் ஏழை என்பதால் இவர்கள் வீட்டில் பெண் எடுக்க யாரும் தயாராக இல்லை போலும். அதேநேரம் இவர்களது வீட்டுக்கு ஒரு இளைஞர் வருகிறார். ஒரு இரவு மட்டும் அவர்களது வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்கிறார். அவர்களுக்கு பணம் தருவதாக சொல்லியும் அதனை சார்லி மறுத்துவிடுகிறார். சந்தோஷ் பிரதாப் அந்த இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வரலட்சுமி தனது வீட்டுக்கு வந்த அந்த இளைஞரிடம் கட்டுக்கட்டாக பணமும் நகையும் இருப்பதைத் தெரிந்து அவரைக் கொன்றுவிட்டு அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
தமிழில் பல அழுத்தமாக கதைகளை, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தது வரலட்சுமியாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்த படத்திலும் தனது திறமையைக் காண்பித்திருக்கிறார். சார்லி, ஈஸ்வரி ஆகியோருடன் இவருக்கு இருக்கும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகிறது. மூவரின் நடிப்பும் பிரமாதம் போட வைக்கிறது. சார்லியின் பரிதாபமான முகம் பின் மகளின் பேச்சைக் கேட்டுவிட்டு அவரும் வில்லத்தனம் செய்யும் ஒரு பரிதாபகரமான முகம் என அவரின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை
அழுத்தமான கதையம்சம், இருட்டான காட்சிகள் என தேவையான ஒளிப்பதிவை செழியனும், இசையை சாம் சிஎஸ்ஸும் கொடுத்து படத்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர். திரைப்பட ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் வகையிலான ஒரு படம்