மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.
இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பில் *SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS *என இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி மக்கள் இயக்கம் சார்பில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 24 அணியினர் கலந்து கொண்டனர். போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 , இரண்டாம் பரிசாக 30,000 , மூன்றாம் பரிசாக 15,000 மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கம்பம் சத்தியமூர்த்தி நினைவு அணியினர் முதல் இடமும், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்கை கிட்டர்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேக்ஸிமஸ் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறப்பு அணியினருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையை கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி செயலர் அசோக்குமார், மியூசிக் ஸ்டார் செந்தில்நாதன் வழங்கினர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட விஜய் சேதுபதி மக்கள் இயக்கத்தினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் மக்கள் செல்வன் நற்பணி இயக்கத்தின் தலைமை சார்பாக நன்றிகள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.