‘பத்து தல’ திரைப்பட ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:சிம்பு,கவுதம் கார்த்திக்,ப்ரியா பவானிசங்கர்
இயக்கம்: கிருஷ்ணா
சினிமா வகை:Action, Drama, Crime
கால அளவு:2 Hrs 15 Min
வியாக்கிழமையான சிம்பு நடித்திருக்கும் பத்து தல மற்றும் தெலுங்கு நடிகர் நெச்சூரல் ஸ்டார் நானி நடித்திருக்கும் தசரா படங்கள் திரைக்கு வந்துள்ளன. நாளை வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை படம் திரைக்கு வருகிறது.
சிம்பு படம் என பில்டப் செய்யப்பட்டு வெளியான பத்து தல படத்தை பார்க்க காலையிலேயே தியேட்டருக்கு சென்ற சிம்பு ரசிகர்களுக்கு முதல் பாதி ரொம்பவே சோதனைக்களமாக மாறியது தான் மிச்சம்.
கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆன இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் இந்த பத்து தல.
ஆரம்பத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரான சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விட்டு புதிய முதல்வர் ஒருவரை தேர்வு செய்கின்றனர். அந்த கடத்தலுக்கு பின்னணியில் மணல் மாஃபியா டானான ஏஜி ராவணன் உள்ளார் என்றும் அவரை பிடிக்க சிபிஐ அதிகாரிகள் குணா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக்கை அனுப்புகின்றனர்.
ஏஜிஆர் யார் என்பதை கண்டறிய சென்ற கெளதம் கார்த்திக் ஏஜிஆர் சிம்புவையே இடைவேளையின் போது தான் ஐ சா தி டெவில் என பார்க்க இடைவேளை விட்டு விடுகின்றனர்.
முதல் பாதி முழுவதும் அவெஞ்சர் படங்களில் தானோஸுக்கு கொடுத்த அதே பில்டப்பை இங்கே கொடுத்துள்ளனர். ஆனால், அந்த காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் ஆமை வேகத்தில் நகர்வதாலும், சிம்புவை காட்டிய பின்னரும் ஸ்லோமோ காட்சிகளை போட்டு ரசிகர்களை இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா அடிக்கடி ஒன் பாத்ரூம் போயிட்டு வந்தும் படத்தை பார்க்கலாம் என்கிற ரேஞ்சுக்கு எந்தளவுக்கு சொதப்பல் திரைக்கதை உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பி எடுத்திருக்கிறார்.
மணல் கொள்ளையை செய்து விட்டு மகான் மாதிரி ஹீரோவை காட்டினால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எடுபடுமா? என்பது பெரிய கேள்விக்குறி தான். துணை முதலமச்சராக வரும் கெளதம் மேனனுக்கு வில்லத்தனமான ரோல் என்றாலும், அவரது கதாபாத்திரம் மற்றும் காட்சிகளில் வில்லத்தனமே இல்லாமல் ரசிகர்களை போரடிக்க வைத்து விடுகிறது.
எப்படியோ கடைசி வரை ஏஜிஆர் மாஸை வைத்து மட்டுமே ஓட்டி விடலாம் என நினைத்து படத்தை கெடுத்து விட்டனர் என்றே ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இனிமே நான் வந்துட்டேன் என சிம்பு அடுத்த படத்திலும் தனது ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்கி விட்டு இது போன்ற ஓட்ட உடைசல் படத்தைத் தான் கொடுப்பாரா? என்கிற ட்ரோல்கள் தியேட்டரிலேயே பறக்கின்றன.
இரண்டாம் பாதிக்கு மேல் சிம்பு வந்தாலும், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து தியேட்டரை தெறிக்கவிடுகிறார். அதுவரை மயான பூமியாக இருந்த தியேட்டர் அப்பாடா இப்பவாவது சிம்புவோட மூஞ்சியை காட்டுனீங்களே என நிம்மதி பெருமூச்சு விட்டு தூக்கத்தில் இருந்து மற்றவர்களை எழுப்ப போட்ட சத்தம் தான் அந்த கூச்சலும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
கிளைமேக்ஸில் குதிரையில் எல்லாம் ஏறிக் கொண்டு துப்பாக்கி எடுத்து சுடும் பத்து தல ராவணன் இறங்கி வந்து கத்தியை எடுத்துக் கொண்டு ஏகப்பட்ட எதிரிகளை துவம்சம் செய்கிறார். ஏஜிஆரை பிடிக்க வந்த அந்த அண்டர்கவர் ஆபிஸர் கடைசியாக என்ன ஆனார்? சிம்புவை அரஸ்ட் செய்தாரா? இல்லையா? என்பது தான் பத்து தல கிளைமேக்ஸ். இடைச்செருகலாக பிரியா பவானி சங்கரின் காதல் மோதல்களும், ஆர்யா மனைவி சாயிஷாவின் ஐட்டம் டான்ஸும் படத்தில் ஒட்டவே இல்லை.
கடைசி வரை சிம்புவுக்காக போராடி பிஜிஎம் மூலமாக படத்தை தூக்கி நிறுத்த பாகுபலி போல போராடி இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால், பாடல்களில் அந்த மெனக்கெடல் வெந்து தணிந்தது காடு, கடல் போல பெரிதாக தெரியவில்லை. சிம்பு நடனமாடும் அந்த நம்ம சத்தம் பாடல் மட்டும் ரசிகர்களை தியேட்டரில் டான்ஸ் போட வைக்கிறது.
மொத்தத்தில் பத்து தல. சிம்பு, கவுதம் கார்த்திக்கிற்காக பத்து தல படத்தை தாராளமாக பார்க்கலாம்.