‘அடியே’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : GV Prakash Kumar, Gowri Kishan, Venkat Prabhu, RJ Vijay, Madumukesh, Swetha Venugopal
Directed By : Vignesh Karthik
Music By : Justin Prabhakaran
Produced By : Maali & Manvi Movie Makkers – Prabha Premkumar
அதிக எதிர்பார்ப்பில் வந்த படம் தான் அடியே திட்டம் இரண்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அடியே…ஒரு Sci Fi-னுடன் டைம் டிராவல் மற்றும் Reality கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர் இது முற்றிலும் புதிய வகை படமாக தான உள்ளது.அதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது அத்தகைய எதிர்பார்ப்பை அடியே திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்…
பள்ளி பருவத்தில் இருந்து கதாநாயகி கௌரி கிஷன் ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ். பள்ளியின் கடைசி நாளில் எப்படியாவது தனது காதலை செந்தாளிணியிடம் கூறி விடலாம் என முடிவு செய்கிறார் ஜிவி.
ஆனால், அவர் காதல் சொல்ல போகும் நேரத்தில் அவருடைய தாய் தந்தை இருவரும் விபத்தில் இறந்த செய்தி வருகிறது…தனது தாய், தந்தையின் மரணத்திற்கு பின் சொந்த வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவர், நண்பனின் வீட்டிற்கு வந்து அங்கு வசிக்கிறார்.
இப்படியே சில ஆண்டுகள் செல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தவித்து வரும் அவர் இனி உயிருடன் இருக்க வேண்டாம் என முடிவு செய்து தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய ஒருதலை காதலி செந்தாளிணியின் குரல் தொலைக்காட்சியில் கேட்க தற்கொலை முயற்சியை கைவிட்டு, செந்தாளிணி தேடி தனது காதலை சொல்ல போகிறார்.
இப்படி ஒரு நேரத்தில் மீண்டும் அவருக்கு தடங்கல் ஏற்படுகிறது இந்த தடங்கலுக்கு பின் என்ன நடந்தது Reality-க்குள் ஜீவா எப்படி சென்றார் என்பதே படத்தின் கதை இதனை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் சொல்லியுளளார் என்றே சொல்லலாம்…
அடியே படத்தின் முதல் பாதியில் ஒரு சில Negetive Points இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகவில்லை என்று தான் சொல்லவேண்டும்…அதனைப்போல எமோஷனல் காட்சிகள் கூட அழுத்தமாக இருந்து இருக்கலாம் என்று சொல்லத்தோன்றுகிறது.இவை எல்லாமே அழுத்தமாக இல்லாத காரணத்தினால் திரைக்கதையின் ஒரு பக்கம் சொதப்பல்..ஆனால் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கலாம்.
மொத்தத்தில் ‘அடியே’ திரைப்படம் காதலர்களுக்கான படம்.