Saturday, November 2
Shadow

விஜய பிரபாகரன் பாடி நடித்துள்ள “என் உயிர் தோழா” இசை ஆல்பம்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள “என் உயிர் தோழா” என்ற தனி இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 
இந்த இசை தகடினை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட தயாரிப்பாளர் எல்.கே.சுதிஷ் பெற்றுக் கொண்டார் . அருகில் கேப்டனின் இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் இந்த ஆல்பத்தின் இசையமைப்பாளரும் இயக்குனருமான ஜெஃப்ரி உடனிருந்தார்.
 
 
இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..
 
தமிழை என்னுயிர் என்பேன் நான்…
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர்,
 
இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.