‘ரத்தம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Vijay Antony, Ramya Nambeesan, Mahima Nambiar, Nandhitha Swetha, Nizhalgal Ravi, Kalaiyarani, OAK Sundar, John Mahendran
Directed By : CS Amudhan
Music By : Kannan Narayanan
Produced By : Infiniti Film Ventures – Kamal Bohra, Pankaj Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரத்தம். இந்த படத்தை சி படம் அமுதன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
பத்திரிகை நிறுவனத்தின் நிருபரான விஜய் ஆண்டனி வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார். அப்போது அவரது மனைவிக்கு பிரசவலி ஏற்படுகிறது. பிரசவத்தின் போது அவர் இறந்துவிடுகிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி குடிக்கு அடிமையாகி தன் மகளுடன் மும்பையில் தனியாக வசித்து வருகிறார்.ஒருநாள் விஜய் ஆண்டனிக்கு மறுபடியும் நிருபர் வேலையில் வந்து சேருமாறு அழைப்பு வருகிறது.
முதலில் அந்த அழைப்பை மறுக்கும் விஜய் ஆண்டனி அதன்பின் தன் மகளுக்காக அந்த வேலையில் சேர்கிறார். அப்போது ஒரு செய்தி குறித்து விஜய் ஆண்டனி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அது ஒரு பெரிய பிரச்சனையாக முடிகிறது.இறுதியில் அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையில் இருந்து விஜய் ஆண்டனி எப்படி வெளிவந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்விஜய் ஆண்டனி எப்போதும் போல் தன் சாதுவான நடிப்பால் கவந்துள்ளார்.
தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ரம்யா நம்பீசன் மற்றும் நந்திதா அழகாக தோன்றி திரையை ஆக்கிரமித்துள்ளார்.எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகிமா நம்பியார் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். நிழல்கள் ரவி தன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இயக்கம்ஒரு வித்தியாசமான கதையை இயக்கியுள்ளார் சி.எஸ்.அமுதன். இடைவேளையில் ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளார். கதையை வலுவாக அமைத்த இயக்குனர் திரைக்கதையில் சொதப்பிவிட்டார். படத்தில் சில நம்ப முடியாத காட்சிகள் இருப்பது ஏமாற்றம். படத்தின் வேகத்தை சற்று அதிகரித்திருக்கலாம்.
இசைகண்ணன் நாராயணன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.ஒளிப்பதிவுகோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.படத்தொகுப்புடி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு ஓகே.காஸ்டியூம்ஷிமோனா ஸ்டாலின் காஸ்டியூம் பரவாயில்லை.புரொடக்ஷன்இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் ‘ரத்தம்’ படத்தை தயாரித்துள்ளது.