‘இ-மெயில்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Ragini Dwivedi, Ashok Kumar, Billi Murali, Manobala, Aarthi Shree
Directed By : SR Rajan
Music By : Gavaskar Avinash and Jubin
Produced By : SR Film Factory
நவீன உலகத்தில் டெக்னாலஜியால் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதற்கு இணையாக பல்வேறு சிக்கல்கள் இருந்து தான் வருகிறது குறிப்பாக ஆன்லைன் விளையாட்டு மூலம் எத்தனையோ பேர் தங்கள் உயிரைக் கூட மாய்த்து இருக்கிறார்கள் குறிப்பாக கொரோனா காலகட்டத்தின் போது ஊரடங்கில் இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு பலர் அடிமையாகி தங்களுடைய பணத்தை இழந்து இருந்தார்கள் இதனால் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டது.
இப்படி ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி பெண் ஒருவர் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த இ-மெயில். படத்தின் நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள நாயகி ராகினி ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகிறார். ஒரு கட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விடுகிறார்.
தன்னுடைய மனைவியை அந்த பிரச்சனை இருந்து காப்பாற்ற நாயகன் அசோக்கும் முயற்சி செய்கிறார். தன்னுடைய மனைவியை காப்பாற்ற நாயகன் முயற்சி செய்யும் சமயத்தில் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட தானே களத்தில் இறங்கி தீர்வு காண முடிவெடுக்கிறார் நாயகி. இறுதியில் தன்னுடைய பிரச்சனைகள் இருந்து நாயகி மீண்டாரா? கணவரை அவர் காப்பாற்றினாரா? என்பதே இந்த படத்தின் கதை.
ஆன்லைன் விளையாட்டில் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த தலைமுறைக்கு ஏற்ற ஒரு மையக்கரு.
ஆக்ஷன், காதல் என்று ஒட்டு மொத்த படத்தையும் ஒரு சிங்கிள் ஆளாக தாங்கி இருக்கிறார் நாயகி.
படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வம் படத்தை லைவ்லியாக காட்டி இருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்திற்கு ஒரு சுவாரசியம்.
மிகவும் பலவீனமான திரைக்கதை.
படத்தில் ஹீரோவிற்கு பெரிதான பங்கு கிடையாது.
படத்தின் இசை படத்திற்கு பளு சேர்க்கவில்லை.
கிளைமாக்ஸ்ஸில் இருக்கும் ஒரு ட்விஸ்டை நம்பி படத்தின் 90 சதவீத கதையில் கோட்டைவிட்டுள்ளனர்.
ஆண்களை அடிப்பது, பைக் ஓட்டுவது என்று இருந்தாலே சமுதாயத்தில் தைரியமான பெண் என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பது அபத்தம்.
காட்டுக்கு சிங்கம் ராஜாவாக இருந்தாலும், எப்போதும் வேட்டையாடுவது சிங்கம்தான், அதே போல ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்குள் ஆயிரம் ஆண்கள் இருக்கின்றனர்’ என்ற வசனம் மூலமே இந்த படத்தின் கருவை புரிய வைக்கிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும், பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், ஆன்லைன் சூதாட்டதின் ஆபத்துக்கள் போன்ற கருத்தை சொன்னாலும் அதை சொல்லி இருக்கும் விதத்தை சுவாரசியமாக சொல்ல தவறியதால் இந்த இ-மெயில், டிராப்ட்டில் வைக்கப்பட வேண்டிய படம் தான்.