தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் இந்த படத்தை இயக்குநர் ரா.சுப்ரமணியன் இயக்கியுள்ளார்..
படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறும்போது, “ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி, ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட தண்டனையும் பெற்றுக் கொடுத்து வருகிறார் ஆனால் தண்டனைக்காலம் முடிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், ஏதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும், அவருக்கு தவறாக தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டோம் என்பதும் தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக, அதற்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக, உண்மையான குற்றவாளி யார் என தேடி பத்து வருடம் கழித்து மீண்டும் பயணப்படுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதுதான் அமீராவின் கதை” என்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்..
பல சர்வதேச விருதுகளை குவித்த டூலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் go இசையமைக்கிறார்.