Friday, February 7
Shadow

‘ரெபல்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : GV Prakash Kumar, Mamitha Baiju, Subramaniya Siva, Karunas, Kalluri Vinoth, Adidhya Baskar, Antony, Vengitesh VP, Shalurahim

Directed By : Nikesh RS

Music By : GV Prakash Kumar

Produced By : Studio Green – KE Gnanavelraja

வர்க்க பாகுபாடுகளுக்கு எதிரான செங்கொடி பறக்கும் கேரள மண்ணின் மூணாறு பகுதியில் குறைந்த கூலி, அதீத வேலையில் உழன்று தவிக்கின்றனர் தமிழர்கள் சிலர். இந்தத் துயரிலிருந்து விடுபட கல்வியை ஆயுதமாக கருதும் அவர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ்), பாண்டி (வினோத்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்டோருக்கு பாலக்காட்டில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கிறது.

அங்கு அவர்கள் தமிழர்கள் என்பதாலேயே மலையாள மாணவர்களால் ஒடுக்கப்படுகின்றனர். ராகிங் என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தப்படுகிறது. இதனிடையே, கல்லூரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்பட, மலையாள மாணவர்களுக்கு எதிராக தேர்தலில் களமிறங்குகினறனர் தமிழக மாணவர்கள். பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் அவர்களின் முன்னெடுப்புதான் திரைக்கதை.

80-களில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியிருப்பதாக கூறப்படும் இப்படம் மலையாளிகளால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பேசுகிறது. மூணாறு தோட்டத் தொழிலாளர்களின் வலி, தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், அதையொட்டிய கலவரம், இனப் பாகுபாடு, மலையாளிகளின் ஆதிக்கம் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நிகேஷ்.

தமிழன் வாழ வைப்பான், தமிழன் கண்டுபிடித்ததுதான் வேஷ்டியும் – சேலையும், இது தமிழர் அடையாளம், தமிழர்கள் என்றால் கேவலமா? தமிழ் மொழியிலிருந்து பிரிந்தது தான் மற்ற தென்னிந்திய மொழிகள், தமிழனாக பிறந்தது தவறா என ஏகப்பட்ட ‘தமிழர்’ பெருமை பேசும் வசனங்களும், அதற்கு எதிராக ஒட்டுமொத்த மலையாளிகளையும் பொதுவாக குற்றம் சாட்டி காட்சிப்படுத்தியிருப்பது ஆபத்தான ‘இன வெறுப்பு’. இதனாலேயே படம் ஒரு கட்டத்தில் பிரசாரத் தொனிக்கு மாறிவிடுகிறது.

தமிழன் வாழ வைப்பான், தமிழன் கண்டுபிடித்ததுதான் வேஷ்டியும் – சேலையும், இது தமிழர் அடையாளம், தமிழர்கள் என்றால் கேவலமா? தமிழ் மொழியிலிருந்து பிரிந்தது தான் மற்ற தென்னிந்திய மொழிகள், தமிழனாக பிறந்தது தவறா என ஏகப்பட்ட ‘தமிழர்’ பெருமை பேசும் வசனங்களும், அதற்கு எதிராக ஒட்டுமொத்த மலையாளிகளையும் பொதுவாக குற்றம் சாட்டி காட்சிப்படுத்தியிருப்பது ஆபத்தான ‘இன வெறுப்பு’. இதனாலேயே படம் ஒரு கட்டத்தில் பிரசாரத் தொனிக்கு மாறிவிடுகிறது.

படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறி வரும் ஜி.வி.பிரகாஷ், கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் ஆக்ரோஷ இளைஞனாக மிளிர்கிறார். நேர்த்தியான நடிப்பில் ஈர்க்கும் மமிதா பைஜூ காதலுக்கும், சில காட்சிகளுக்குமே பயன்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம். கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, ஷாலு ரஹீம், சுப்ரமணிய சிவா தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

80-களின் டேப்ரீக்கார்டர் தொடங்கி, பாழடைந்த ஹாஸ்டல், அதன் அறைகள், திருகும் தொலைக்காட்சிப் பெட்டி, என கலை ஆக்கம் கச்சிதம். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நாயகனின் எழுச்சி உள்ளிட்ட இடங்களில் கைகொடுக்கிறது. இரண்டாம் பாதிக்கு மேல் இரைச்சல். கிடைக்கும் இடங்களில் தனித்த ஷாட்ஸ்களால் கவனம் பெறுகிறது அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு.

உண்மைச் சம்பவத்தை விழுங்கும் அதீத நாயகத்தன்மையும், பிரசார பாணியிலான இன வெறுப்பும், சோர்வைத் தரும் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதையும் ரெபலின் புரட்சியை ஒடுக்கிவிட்டன. மொத்தத்தில், இந்த ‘ரெபல்’ திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டும் இல்லை, என்பதை மறுபடியும் நிரூபித்து மக்களை கொண்டாட வைத்திருக்கிறது.