நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய நுழைவுத்தேர்வு!
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்குவதற்காக சமீபத்தில் புரிந்துணர்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர்.ஐசரி.கே.கணேஷ், பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் திரு.வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் 03-05-2024 -அன்று கையெழுத்தானது.
அதன்படி மூன்றாண்டு இளங்கலை திரைப்பட கல்வி[B.Sc Film Studies(3 Years)], இரண்டாண்டு முதுகலை திரைப்படம் மற்றும் கலாச்சார கல்வி[M.Sc. Film and culture studies(2 years)], ஊடகத் திறன்களுக்கான ஓராண்டு முதுகலை பட்டயப் படிப்பு[PG Diploma in Media skills(1 year)]-ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டது.
பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் :-
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும்.
நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் :-
தற்போது வேல்ஸ் கல்விக்குழுமம் 42,000 மாணவர்கள் மற்றும் 7,500 பணியாளர்களுடன் சுமார் 43 நிறுவனங்களுடன் கல்வி சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.வேல்ஸ் குழுமம் லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கள் கல்விசேவையை விரிவுபடுத்தியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட இளநிலை (யுஜி), முதுகலை (பிஜி) பாடப்பிரிவுகளை வழங்குகிறது.வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமுதாயத்தொண்டு வேல்ஸ் கல்வி நிறுவனம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் கல்வி பயில வழிவகை செய்யும் வகையில் வி-சாட் என்னும் தகுதித்தேர்வை நடத்தி,அதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கி வருகிறது.அதேபோல இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், நலிந்த நாடகக்கலைஞர்கள் மற்றும் பெப்சி உள்ளிட்ட அமைப்புகளில் இருக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும் பொருளாதார உதவிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி பயில தேவையான உதவிகள் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து திரைப்படக் கல்வியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகம். இதன் சார்பில் முதல் நுழைவுத் தேர்வாக 2024-2025 கல்வி ஆண்டிற்கான, இளங்கலை திரைப்படக் கல்விக்கான [B.Sc Film Studies(3 Years)] நுழைவுத் தேர்வு பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் 09-06-2024(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.
இத்தேர்வில் குறிப்பிடத்தக்க அளவிலான தகுதியுடைய மாணவர்கள் தேர்வை எழுதினர். இத்தேர்வில் வெற்றியடையும் மாணவர்கள், மேற்கண்ட படிப்புகளில் சேர்ந்து, இந்த கல்வி ஆண்டே சேர்ந்து தங்களது உயர் கல்வியை பயிலலாம்.