‘டீன்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Parthiban, Yogi Babu, Vishrutha, D Amruutha, Frankinsten, Asmitha, D. John Bosco, Sylvensten, Prashitha, Deepesshwaran, Udaipriyan, K.S. Deepan, Roshan, L.A. Rishe Ratnavel, Asmitha Mahadevan
Directed By : Parthiban Radhakrishnan
Music By : D.Imman
Produced By : Ranjith Dhandapani, Keerthana Parthiepan, Parthiban Radhakrishnan, Pinchi Srinivasan, Bala Swaminathan, Caldwell Velnambi
ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள்.
இவர்களுடைய பயணம் சுமுகமாக நடந்துவிட்டால் திரைக்கதை எழுத முடியாதே? அவர்கள் செல்லும் வழியில் பல இடையூறுகள் அவற்றைத் தொடர்ந்து பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதை எல்லாம் சொல்லியிருக்கிறது டீன்ஸ்.
பேயைப் பார்க்கப் போய்ச் சிக்கலில் மாட்டும் சிறுவர்கள், பேயைப் பார்த்தார்களா? அல்லது யாரைப் பார்த்தார்கள் என்பதில் ஓர் ஆச்சரியம் வைத்திருக்கிறார் பார்த்திபன்.
சிறுவர்கள் எல்லோருமே ஒளி வெள்ளப் பயமின்றி இயல்பாக நடித்திருக்கிறார்கள்.அவர்கள் பேசும் விசயங்களில் பல உவப்பானவை இல்லை.அதற்கு அவர்கள் பொறுப்புமில்லை.
ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் யோகிபாபு.அவரும் அளவாக நடித்திருக்கிறார்.
படத்தை நகர்த்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பார்த்திபன் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.நடித்துமிருக்கிறார்.
டி.இமானின் இசையில் பாடல்கள் பல வகை. அவ்வளவையும் கேட்கலாம்.பின்னணி இசையும் இசைவு.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி க்கு குறைந்த வாய்ப்பு நிறைவாகச் செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் பார்த்திபன். சிறுவர்களை மட்டுமே வைத்து ஒரு படம் எடுத்திருப்பதும் அதில் பேசியிருக்கும் விசயங்களும் பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பதும் வரவேற்புக்குரியவை.
மொத்தத்தில், இந்த ‘டீன்ஸ்’ ஒருமுறை பார்க்கலாம்