Saturday, November 2
Shadow

‘ரகு தாத்தா’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Raghu Thatha | ரகு தாத்தா Cast and Crew

ஹோம்பாலே பிலிம்ஸ் | Homabale Films | Vijay Kiragandur | விஜய் கிரகந்தூர்

Keerthy Suresh – Kayalvizhi Pandian
கீர்த்தி சுரேஷ் – கயல்விழி பாண்டியன்

M.S Bhaskar – Raghothaman
எம்.எஸ்.பாஸ்கர் – ரகோத்தமன்

Devadarshini – Alamelu
தேவதர்ஷினி – அலமேலு

Ravindra Vijay – Tamil Selvan
ரவீந்திர விஜய் – தமிழ் செல்வன்

Anandsami – Ranganathan
ஆனந்தசாமி – ரங்கநாதன்

Crew

தயாரிப்பு: விஜய் கிரகந்தூர்
எழுதி இயக்கியவர்: சுமன் குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் சுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்
நிர்வாக தயாரிப்பாளர்: ரியா கொங்கரா
இணை இயக்குனர் – துர்கேஷ் பிரதாப் சிங்
ஒளிப்பதிவு இயக்குனர்: யாமினி யக்ஞமூர்த்தி
படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராம்சரந்தேஜ் லபானி
விளம்பர எடிட்டர்: ஸ்னீக் பீக்
ஆடியோகிராஃபர்கள்: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எஸ். சிவகுமார் (ஏஎம் ஸ்டுடியோஸ்)
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா
கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி
வசனம்: மனோஜ் குமார் கலைவாணன்
போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர்: ஓ.கே. விஜய்
விளம்பர வடிவமைப்பாளர்: ஜெயன்
ஸ்டில் போட்டோகிராபர் – விஷ்ணு எஸ் ராஜன்

Heroin: Keerthy Suresh
Produced by: Vijay Kiragandur
Written & Directed by: Suman Kumar
Creative Producer: Vijay Subramaniam
Music Director: Sean Roldan
Executive Producer: Rhea Kongara
Associate Director & Post Head: Durgesh Pratap Singh
Director of Photography: Yamini Yagnamurthy
Editor: T.S. Suresh
Production Designer: Ramcharantej Labani
Promo Editor: Sneak Peek
Audiographers: Anand Krishnamoorthi, S. Sivakumar (AM Studios)
Costume Designer: Poornima
Keerthy’s Costume Designer: Shruthi Manjari
Dialogues: Manoj Kumar Kalaivanan
Post Production Supervisor: O.K. Vijay
Publicity Designer: Jayan
Still Photographer – Vishnu S Rajan
Digital Media Partner: Silly Monks

70களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியம் பேசும் பெண்ணாக வளர்கிறார், கயல்விழி (கீர்த்தி சுரேஷ்). இந்தி திணிப்புக்கு எதிராக போராடி, தன் ஊரில் பிறந்த ஏக்தா சபாவை மூடும் அவர், அனைவருக்கும் முன்மாதிரியாக கெத்தாக வலம் வருகிறார். வங்கியில் வேலை செய்யும் இவருக்கு, திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. இருப்பினும், தனது தாத்தாவிற்காக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். வீட்டில் வரன் பார்க்க தொடங்குகின்றனர்.

யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தனக்கு நன்கு தெரிந்த தமிழ்செல்வனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அவரும் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தான் கல்கத்தாவிற்கு பணியிட மாற்றம் செய்து கொண்டு போவது தான் சரி என முடிவெடுக்கும் அவர், அதற்கான இந்தி பரீட்சையையும் எழுத முயற்சி செய்கிறார்.

ஒரு பக்கம், தான் இந்தி பயில்வது வெளியில் தெரிந்து விடுமோ என்று பயத்திலும் இருக்கிறார். இறுதியில் அவருக்கு திருமணம் நடந்ததா இல்லையா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிந்ததா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை.

ரகு தாத்தா படத்தை பொருத்தவரை, அதன் கதை என்னவோ பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் இருக்கிறது. ஆனால், படத்தை வெளிக்கொண்டு வந்த விதம் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்ததா என்று கேட்டால், அதற்கான விடை குழப்பமாகத்தான் வரும். காரணம், அழுத்தமான திரைக்கதை இந்த படத்தில் மிஸ் ஆவதுதான். படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே கொட்டாவி விட வைக்கும் அளவிற்கு மெதுவாக செல்கிறது திரைக்கதை. பாதிவரை, “எப்போது இடைவேளை வரும்?” என்ன காத்திருக்கும் ரசிகர்கள், அடுத்த பாதையில் “எப்போ படம் முடியும்?”என்று காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு நம் பொறுமையை சோதிக்கிறது திரைக்கதை. இந்தி திணிப்பு மற்றும் கலாச்சார திணிப்பிற்கு எதிராக பேசும் யோசனை சரிதான் என்றாலும் அதை இன்னும் நேர்த்தியாக கொண்டு போயிருந்தால் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்திருக்கும்.

ரகு தாத்தா படத்தில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் சாதாரண காமெடி வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை நன்கு ஈர்த்துள்ளனர். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ்க்கு அண்ணி பேசும், “500 ரூவா குடுத்தா ஆளையே தூக்கிருவான்..” இடத்தில் ரகளை. அதேபோல, கீர்த்திக்கு காதலனாக வருபவர் தான் ஒரு பிற்போக்குவாதி என காட்டிக் கொள்ளாமல் நடிக்கும் இடங்கள் கைதட்ட வைக்கின்றன. சில சமயங்களில் பெரும்பான்மையான ஆண்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் பாத்திரமாக தோன்றுகிறார். தேவதர்ஷினி கீர்த்தியுடன் சேர்ந்து பிறரை கலாய்க்கும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன.

படம் முழுக்க, கீர்த்தி சுரேஷ்க்கு பல இடங்களில் கொடுத்த வசனங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பவர்ஃபுல் டயலாக்கும் வெற்றுப் பேச்சாக கலைகிறது. படம் 70களில் எடுக்கப்பட்டது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் சில சமயங்களில் “அந்த காலத்தில் இப்படி எல்லாம் இருந்ததா?” என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. திரைக்கதையில் ஏற்பட்ட தோல்வினால் நல்ல கதையையும் ரசிக்க முடியாதபடி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய் ஆகியோரின் கேரக்டர், இயல்பாக இருக்கிறது. இவர்களைத் தாண்டி, தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் ஸ்கோர் செய்கின்றனர். தான் இசையமைக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாட்டை ஹிட் ஆக்கிவிடும் ஷான் ரோல்டன் இதில் ஏமாற்றி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நாம் பார்த்த அதே காமெடி சப்ஜெக்ட் என்றாலும் ரகு தாத்தா படத்தின் கதை மற்ற கதைகளைப்போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானது

ஒரு பெண் தனது கொள்கைக்காக வாழும்போது அதில் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இன்னும் எதார்த்தத்துடன் தொடர்புபடுத்தி காட்டியிருந்தால் நிச்சயம் இன்னும் கூட நல்ல படமாக உருவாகி இருக்கலாம்.