‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal, Badava Gopi
Directed By : Balaji Kesavan
Music By : Nivas K Prasanna
Produced By : M.Thirumalai
ஹீரோ அசோக் செல்வன், திரைப்பட இயக்குநராக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அதற்காக பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிகிறார். இதற்கிடையே ஹாஸ்பிடல் நர்ஸ் அவந்திகா மிஸ்ராவை பார்க்கிறார்… பார்த்ததும் காதல் கொள்கிறார். அவரும் லவ்வ… நல்லபடியாகவே போகிறது.அசோக் செல்வன் வழக்கம்போல துடிப்பான இளைஞனாக வந்து கவர்கிறார். காதலியிடம் சிக்கி தவிப்பது, அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது என்று இயல்பான காதலான அசத்துகிறார். நாதி அவந்திகா மிஸ்ரா அழகு.. அதே நேரம் நடிப்பும் சிறப்பு. அசோக் செல்வன் மீதான காதலை வெளிப்படுத்துவது, அவர் மோசமானவர் என நினைத்து ஆவேசம் காட்டுவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
நாயகனின் அப்பாவாக பெருமாள் நிறைவான நடிப்பை அளித்து உள்ளார். மகனைப் பற்றி அவனது காதலிக்கு புரிய வைக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் ஊர்வசி வழக்கம்போல சிரிப்பை வாரி வழங்குகிறார்.
நாயகனின் மாமாவாக வரும் படவா கோபி, டாக்டராக வரும் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறது. அதேபோல் காமெடி காட்சிகளிலும் பழைய இளையராஜா மியூசிக்கை பயன்படுத்தி சிரிக்கவும் வைத்திருக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
காதலர்களுக்குள் மோதல்.. பிறகு ஊடல்… பிறகு சேர்கிறார்களா… என்கிற பழைய கான்செப்ட்தான். ஆனால் நகைச்சுவை கலந்து கொடுத்து ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர்.
மொத்தத்தில் இந்த ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ ரசித்துப் பார்க்கலாம்.