Friday, February 7
Shadow

‘வல்லான்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Sundar.C. Tanya Hope, Hebah Patel, Arul D.Shankar, Kamal Kamaraj, Abirami Venkatachalam, Chandhini Tamilarasan, Thalaivasal Vijay, Jayakumar, TSK

Directed By : VR Mani Seiyon

Music By : Dr.VR Manikandaraman & V Gayathri

Produced By : VR Della Film Factory Pvt Ltd –

உயர் அதிகாரியை அடித்ததற்காக போலீஸ்காரரான திவாகர்(சுந்தர் சி.)சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.இந்நிலையில் தன் பண்ணை வீட்டில் பிணமாகக் கிடந்த தொழில் அதிபர் ஜோயலின்(கமல் காமராஜ்) கொலை குறித்து விசாரிக்கும் பொறுப்பு திவாகருக்கு வருகிறது.

ஜோயலின் நிறுவனத்தில் ஏதோ சரியில்லை என்பதை கண்டுபிடித்த பிறகு திவாகரின் வருங்கால மனைவியான ஆத்யா(தான்யா ஹோப்) மாயமாகிவிடுகிறார். ஆத்யா காணாமல் போனதற்கும் ஜோயலின் கொலைக்கும் தொடர்பு இருக்கிறது. கொலை குறித்து மாடல் அழகியான ஹீபா பட்டேலிடம் விசாரிக்கிறார்கள். ரகசியங்கள் வைத்திருக்கும் பணிப்பெண், ஜோயலின் நிறுவனத்தில் அதிகார பிரச்சனை, மதபோதகரான ஆரோக்கியராஜ் மத போதனையை விட பணத்தில் அதிக கவனமாக இருப்பதை காட்டியிருக்கிறார்கள்.

திவாகராக ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் சுந்தர் சி. ஆத்யா காணாமல் போனதால் எப்பொழுதும் சோகமாக காணப்படுகிறார். ஆனால் அவரின் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தான்யா ஹோப்புக்கு பெரிதாக வேலை இல்லை. ஹீபா பட்டேல் தனக்கு கொடுத்த வேலை திறம்பட செய்திருக்கிறார். யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர்.

வல்லான் படத்தின் கதை பொறுமையை சோதிக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் த்ரில்லர் படம் த்ரில்லராக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘வல்லான்’ நிச்சயம் வெல்வான்.