Friday, February 14
Shadow

‘விருமான்’ திரைபட ரேட்டிங்: 2.5/5

 

நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், RK சுரேஷ் மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: S.K. செல்வகுமார்

எடிட்டிங்: வெங்கட் ராஜன்

தயாரிப்பு: 2D Entertainment

இயக்கம்: முத்தையா.

தனது அம்மா இறப்பிற்கு காரணமே தன்னுடைய அப்பாதான் என நினைக்கும் ஹீரோ கார்த்தி, அப்பா மற்றும் தன்னுடைய 3 அண்ணன்களை விட்டு பிரிந்து தனது மாமாவுடன் வாழ்ந்து வருகிறார். அப்பா பிரகாஷை கண்டாலே காண்டாகும் கார்த்தி, இடையில் வரும் நாயகி, வில்லன். இறுதியாக அப்பா – மகன் ஒன்றினைந்தார்களா என்பதே கதைச்சுருக்கம்.

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ கார்த்தி சொல்லவா வேண்டும் பருத்திவீரன், கொம்பன் படங்களில் முரட்டுத்தனமான கிராமத்து இளைங்கனாக படமுழுக்க அசத்தியுள்ளார். ஹீரோயின் அதிதி ஷங்கருக்கு நல்லதொரு அறிமுகம், குறியில்லாமல் தான் நடித்திருக்கிறார் ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை. இவர்களை தவிர வரும் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், RK சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்கள் கொடுத்த பாத்திரங்களை ரொம்ப நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

டெக்கினிக்கல் டீமை பொறுத்தவரை கமர்ஷியல் தேவையான கலர்ஃபுல் ஒளிப்பதிவு பலம். யுவனின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசை இன்னும் வலுசேர்த்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள், அதற்கு வலுசேர்த்த வெங்கட் ராஜனின் எடிட்டிங் பெரிய பலம். இதற்குமுன் முத்தையா இயக்கிய படங்களை பார்த்தவர்களுக்கு இப்படத்தின் கதையோட்டம் என்ன என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்துவிடும், அந்தளவிற்கு அதே டெம்ப்ளேட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். இதைவிட சரத்குமார் நடிப்பில் வெளியான கட்டபொம்மன் என்கிற படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியை அப்படியே வைத்துள்ளனர்.

கதை புதிதாக இல்லை என்றாலும், திரைக்கதையிலும் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை. வில்லன் கதாப்பாத்திரம் அழுத்தமாக இல்லை என்பதால் கிளைமாக்ஸ் முழு திருப்தியை கொடுக்கவில்லை. ஏகப்பட்ட துணை கதாப்பாத்திரங்கள் ஆனால் எதுவுமே பெரிதாக பயன்பட வில்லை, என்னமோ கூட்டம் கூட்டமாக வந்து போறாங்கங்கிற மாதிரி தான் இருக்கு. “ஒரு கண்ணியமான கிராமத்து ஆக்ஷன் திரைப்படம். கார்த்தி & பிரகாஷ் ராஜ் நடிப்பு செம. அதிதி நன்றாக நடித்துள்ளார். டான்ஸ் வெறித்தனம். சூரியின் ஒன்லைன் நகைச்சுவை நன்றாக வேலை செய்கிறது. அற்புதமான நடிப்பு. யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். சில காட்சிகள் யூகிக்கக்கூடியது. திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கிராமப்புற திரைப்பட ஆர்வலர்கள் பார்க்கக்கூடிய திரைப்படம்”