Wednesday, September 28
Shadow

திருச்சிற்றம்பலம் திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Movie Cast & Crew
Cast : Dhanush, Nithya Menen, Raashi Khanna, Priya Bhavani Shankar, Bhagyaraj, Prakash Raj, Bharathiraja,
Production : Sun pictures
Director : Mithran R. Jawahar
Music Director : Anirudh Ravichander

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கழிச்சு தனுஷ் நடிச்ச படம் தியேட்டர்ல இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.தனுஷ் பேன்ஸ் அவங்க தலைவரை பார்க்க செம ஆர்வத்தோட ரெடி ஆக , நம்மளும் தனுஷ் படத்தை ஒரு வருஷம் கழிச்சு பெரிய திரையில் பார்க்க ரெடி ஆனோம்.மித்ரன் ஜவஹர் இயக்கத்துல சன் பிக்சர்ஸ் தயாரிப்புல உருவான திருச்சிற்றம்பலம் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு.படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுதா , படத்தோட பிளஸ்,மைனஸ் என்னென்ன அப்டிங்கிறத பார்க்கலாம்.

உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம்(தனுஷ்), அவரின் உறவுகளை சுற்றியே கதை நகர்கிறது. ஹீரோவின் தாத்தா திருச்சிற்றம்பலம்(பாரதிராஜா) அவருக்கு தந்தை போன்று இருக்கிறார்.அப்பாவோட ஏற்பட்ட சின்ன சண்டையால படிப்பை பாதிலேயே விட்டுட்டு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் நாயகனாக நம்ம திருச்சிற்றம்பலம் தனுஷ், அவரை சுத்தி பல பேர் அவர் மேல அன்பு வெச்சுருந்தும் அவங்களோட பெரிய நெருக்கம் இல்லாம இருக்காரு,அவரோட வாழ்க்கைல வர லவ்,அவர் சந்திக்கிற மனுஷங்க இதுதான் படத்தின் கதை. திருச்சிற்றம்பலம் கடைசியா தன்னோட இருந்தவங்கள புரிஞ்சுக்கிட்டாரா இல்லையா அப்படிங்கிறது தான் படத்தோட மீதிக்கதை.

பல வித்தியசமான கதாபாத்திரங்களை ஏற்று நம்மளை அசரவெச்ச தனுஷ்,இந்த தடவை தனக்கு ரொம்ப ஈஸியா வர பக்கத்து வீட்டு பையன் கதாபாத்திரத்த எடுத்து பக்காவா பண்ணியிருக்காரு.ஜாலியா நித்யா மேனனோட வம்பு இழுக்குற சீனா இருந்தாலும் ,எமோஷனல் சீன் ஆக இருந்தாலும் தன்னோட இயல்பான நடிப்பால மிடில் கிளாஸ் பையனாவே தனுஷ் நம்ம மனசுல நிக்கிறாரு.

 

தனுஷ் Friend-ஆ நம்ம வாழ்க்கைலயும் இப்படி ஒரு பொண்ணு இல்லாம போச்சே அப்படின்னு ஃபீல் பண்ற அளவுக்கு பட்டைய கிளப்பி இருக்காங்க நித்யா மேனன். தனுஷ்,பாரதிராஜா கூட சேர்ந்து அடிக்கிற லூட்டி,நண்பனுக்காக பிரகாஷ்ராஜ் கூட சண்டை போட்றதுண்னு பல இடங்கள்ல ஸ்கோர் பண்ணி அப்ளாஸ் அள்ளுறாங்க நித்யா மேனன்.தனுஷுக்கு போட்டியா பிரகாஷ்ராஜ்,பாரதிராஜான்னு ரெண்டு பேரும் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்காங்க,சீனுக்கு ஏத்த மாதிரி நடிச்சு தங்களோட அனுபவத்தை நமக்கு காட்டி நம்மள ஆச்சரிய பட வைக்கிறாங்க.ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர்,முனீஷ்காந்த்னு மிச்ச நடிகர்களாம் சின்ன சின்ன வேடங்கள்ல வந்து அங்கங்க ஸ்கோர் பன்றாங்க.

மித்ரன் ஜவஹர் நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கதையா இருந்தாலும் திரைக்கதையில வித்தியாசம் காட்டி நம்மள ரசிக்க வைக்கிறாரு.கதை ஸ்லொவ்வா நகருறது சில இடங்கள்ல பின்னடைவா இருக்குறது குறிப்பிடத்தக்கது.படத்தின் இன்னொரு ஹீரோன்னு அனிருத்தை சொல்லலாம்,ஏற்கனவே ஆல்பத்துல சில சூப்பர்ஹிட் பாட்டு கொடுத்துட்ட அனிருத்,பின்னணி இசையால நம்மளை கவர்ந்து இழுக்குறாரு.படத்தோட எடிட்டிங்,கேமரா கதைக்கான தேவை அறிஞ்சு அதற்கு ஏற்ற மாறி பண்ணியிருக்கது கூடுதல் பலம். படத்தின் டயலாக் ரொம்ப லைவா இருக்கது லைக்குகள அள்ளுது.

படத்துல இதுதான் நடக்க போகுதுன்னு தெரிஞ்ச அப்பறம் ஒரு 15 நிமிஷம் போறது , திரைக்கதையை ஸ்லோ ஆக்குது. நித்யா மேனன் தவற மத்த ரெண்டு ஹீரோயின்களும் ரொம்ப கம்மியா வருவது,Flashback ரொம்ப ஸ்ட்ரோங்கா இல்லாதது போன்ற சில மைனஸ் இருந்தாலும் , படத்தோட நீளம் கம்மியா இருக்கது ஒரு பலமா இருக்குது.

திருச்சிற்றம்பலம் படத்தை மிக அழகாக கொடுத்து ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். தனுஷ், நித்யா மேனன் கதாபாத்திரம் நம் மனதுக்கு நெருக்கமானதாகிவிடுகிறது.