Friday, July 26
Shadow

நாட் ரீச்சபிள் ரேட்டிங்: 3/5

படம்: நாட் ரீச்சபிள்

நடிப்பு: விஸ்வா, சாய் தன்யா, காதல் சரவணன், பிர்லா போஸ்,
சுபா தேவராஜ்

தயாரிப்பு: கிராக் ப்ரைன் புரடக்‌ஷன்ஸ்

இசை: சரண்குமார்

ஒளிப்பதிவு: சுகுமாரன் சுந்தர்

இயக்கம்: சந்துரு முருகானந்தம்

பி ஆர் ஒ: பரணி, திரு

 

நகரில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். போலீஸ் அதிகாரி விஸ்வா கொலை காரனை தேடுகிறார். இதற்கிடையில் சாய் தன்யா மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையும் பெறு கிறார். ஊரெல்லாம் தேடியும் விஸ்வாவுக்கு கொலைகாரன் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில் வீடொன்றின் கண்ணாடியில் எழுத்தப்பட்ட சில வார்த்தைகளை க்ளுவாக எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடர்கிறார். அப்போது மாணவ, மாணவிகள் சிலர் காட்டுபகுதியில் தோட்ட ஆராய்ச்சிக்காக சென்றது தெரிகிறது. அதிலிருந்து விசாரணையை முடுக்கிவிடும் விஸ்வா இறுதியில் கொலை காரனை எப்படி அடை யாளம் காண்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

 

கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக நாட் ரீச்சபிள் உருவாகியிருக் கிறது. சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க விஸ்வா நடத்தும் விசாரணைகள் முதல் பாதியில் மெல்லமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சூடுபிடிக் கிறது.

ஹீரோயின் சாய் தன்யா எதற்காக தற்கொலைக்கு முயல்கிறார் என்பதை கதையின் சஸ்பென் ஸுக்காக டைரக்டர் கடைசிவரை தேர்போல் இழுக்கும்போது நெளிய வைக்கிறது.

சைக்கோ கொலைகாரரே சாய் தன்யாதான் என்ற உண்மை தெரியும்போது நிமிர வைக்கிறது. அவர் ஏன் கொலைகாரியாக மாறினார் என்பதற்கும் ஒரு காரணத்தை வைத்திருப்பது கதைக்கு பிடிமானம்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை இயக்கியிருக்கும் இயக்குனர் சந்துரு முருகானந்தம் திரைக் கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் படம் படபடவென நகர்ந்திருக்கும்

கிராக்பிரைன் புரடக்‌ஷன்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது.

ஒளிப்பதிவும், இசையும் சுமார் ரகம்

நாட் ரீச்சபிள்- ஓ கே.