9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’
9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!
ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!!
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.
பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார்.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’
Rangoli First Look garners colossal response from the fans
Gopuram Films K. Babu Reddy and G. Sathish Kumar have produced the film ‘Rangoli’, directed by Vaali Mohan Das, which features newcomers in the lead roles. The story revolves around the lives of contemporary school students.
The film’s first look has been revealed by filmmaker Lokesh Kanagaraj, Actor Arun Vijay, Director Venkat Prabhu, Actor Atharvaa Murali, Music Director GV Prakash Kumar, Actor Sathish, Actress Vani Bhojan, Naveen Chandra and Karthick Rathnam.
So far, Tamil Cinema hasn’t narrated a proper story revolving around school students and their families. Rangoli will encapsulate these elements together and offer an engrossing story. The film is about a boy, who under the pressure of his parents leaves his school and joins a highly valued private school. The incidents that he encounters in this school of new ambiance form the crux of this story…
The film’s first look featuring the school children posing together has kindled nostalgic memories and has increased expectations as well.
Hamaresh, who appeared as a child artiste in the movies like Maanagaram and Deiva Thirumgal debuts in the lead role in this movie. Prarthana, Sai Sri, and Akshaya are appearing as the titular characters. Aadukalam Murugadoss is essaying a pivotal character in this movie.
The film has been shot across the exotic locales of Chennai and Kadappa.
K. Babu Reddy and G. Sathish Kumar of Gopuram Films have produced the movie ‘Rangoli’, which is directed by Vaali Mohan Das. Sundaramurthy KS is composing music, I. Marudhanayagam is handling cinematography and G. Sathya Narayanan is taking care of editing.
The film’s final stage of work is proceeding in full swing and during this juncture, the announcement pertaining to the film’s audio and trailer launch will be made soon.